மழலைச் சொல்

Friday, March 16, 2007

பாட்டியின் கைவண்ணம்


நானும், பாட்டியும் ஒரு நாள் படம் கீறினொம். இது பாட்டி கீறின படம்.


இது பாட்டி அட்டையைக் கொண்டு பின்னியது. அதுக்கு நா நிறம் தீட்டினென்.
நா கீறின படங்களை நாளக்கிப் போடுறென் சரியா?!

Thursday, March 15, 2007

பறவையை அணில் விரட்டுது

எங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு மரம் இருக்கு. அதில ஒரு தானியக்கூடு வச்சிருக்கம். அதுக்கு நிறைய பறவைகள் வரும். இப்ப வசந்த காலம்தானே. புதுசு புதுசா சில பறவைகளும் வருது. சில அணில்களும் வரும். இந்த அணில்கள் வந்தா பறவைகளையெல்லாம் விரட்டி விரட்டி விட்டுடுவாங்க. கீழ கொட்டுறதை வந்து பறவைகள் சாப்பிட்டா, அணில் கீழ இறங்கி வந்து பறவையை விரட்டும். அந்த அணில் எப்படித் தாவித் தொத்தி சாப்பிடுது எண்டு பாருங்க. அணில் சில நேரம் தலைகீழா தொங்கிக்கிட்டே சாப்பிடும். நம்ம அப்படித் தலைகீழாத் தொங்கிக்கிட்டே சாப்பிட முடியுமான்னு அப்பா கேட்டாங்க. முடியாதுன்னு சொன்னென். ஆனா நா தலைகீழா நிப்பேன்னு சோபாவில ஏறி நின்னு காட்டினேன். அணிலுக்கு ஏன் தொங்க முடியுதுன்னா அவங்களுக்கு மரத்தை நல்லாப் பிடிச்சுக்கொள்ற மாதிரி நகங்கள் இருக்கு. அதான்.