மழலைச் சொல்

Saturday, October 25, 2008

பாலைவனத்துல நான்

இண்டக்கி இரவு நா கனவு கண்டேன். அந்தக் கனவு ரொம்ப ரொம்ப கூடாத கனவு. அந்தக் கனவு எதப் பத்தின்னா, ஒரு எலும்புக்கூடு என்னைத் துரத்துது. அது ஒரு பாலைவனம். பின்னாடியே ஓடி வருது. நா வந்து ரொம்ப வேகமா ஓடுறேன். ஒரு பிரமிடுக்குள்ள ஓடுறேன். நா இன்னும் வேகமா ஓடுறதுக்கு மூணு குட்டிக்கரணம் போட்டேன். ஓ நோ! நா மறிபட்டுட்டேன். அதுக்கப்புறம், நா வந்து பவர் ரேஞ்சரோட லீடரா உருமாறிட்டேன். அதுக்கப்புறம், நா வந்து எலும்புக் கூட்டைப் பாத்தேன். அதுக்கப்புறம்...அதுக்குப் புக்குமணியில ஒரு குத்து விட்டேன். இப்ப அந்த எலும்புக் கூட்டுக்கு லீடர் யாரு? நாந்தான். அதுக்கப்புறம், நா வந்து ஒரு குட்டிக் கரணம் போட்டு அந்த எலும்புக் கூட்டை தூத்துமணியில ஒரு உதை விட்டேன். தி எண்ட்.