மழலைச் சொல்

Wednesday, June 27, 2007

ஒயினால் கீறிய படம்

நா தண்ணியைக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ள வைப்பேன். அது உறைஞ்சு பனிக்கட்டியாப் போயிடும். அது crystal, படிகம். ஒரு நாள் அப்பா ஒயின் குடிச்சாங்க. எனக்கு ஒயின் படிகம் எப்படி இருக்கும்னு பாக்க ஆசை வந்திச்சு. அப்பாட்ட ஒயின் கேட்டேன். குளிர்சாதனப் பெட்டில வச்சா ஒயின் படிகம் வராது, ஆனா ஒரு கிண்ணத்தில ஊத்தி ரொம்பநாள் வச்சா வந்தாலும் வரும்னு அப்பா சொன்னாங்க. சரியெண்டு, ஒரு கிண்ணத்த எடுத்து அதில கொஞ்சம் ஒயினை ஊத்தி ஒரு ஓரமா வச்சிட்டோம். ஒரு இருவது நாளு கழிச்சு, எடுத்துப் பாத்தோமா, ஒரு படிகமும் இல்ல. ஆனா ஒயின்ல இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போயி, கொஞ்சம் கொளகொளன்னு இருந்திச்சு. இதுல இனி படிகம் வராதுன்னு நெனக்கிறேன்னு அப்பா சொல்லிட்டாங்க. அப்புறமா, ம்...இது நல்ல நிறமா இருக்கு, இதால படம் கீறுறீங்களான்னு அப்பா கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு கீறினேன். அதான் இது.


ஒயின் கொஞ்சந்தான இருந்திச்சு. அதோட கொஞ்சம் பிரஷ்ல ஒட்டி, பிசுபிசுவெண்டு போச்சா. உடனே அதில என்ன ஊத்தலாம்னு யோசிச்சோம். குளிர்சாதனப் பெட்டியத் திறந்து ஆராய்ஞ்சோமா, இதை ஊத்துவமான்னு கேட்டேன். அப்பாவும் அது சரியான யோசனைனு சொல்லிட்டாங்க. அது vanilla extract. அதுல கொஞ்சம் ஊத்தினவுடனெ, பிசுபிசுன்னு பிரஷ்ல இருந்த ஒயினெல்லாம் கரைஞ்சு நல்லா வந்திடுச்சு. அப்புறமா கீறினது இது. ஒரு பறவை.



அம்மா சொன்னாங்க, இது ரெண்டு பக்கமும் பறக்கிற மாதிரி இருக்குன்னு. அப்புறம் இன்னும் கொஞ்சம் vanilla extract ஊத்தி கீறினது இது. ஒரு எரிமலை, பாத்தீங்களா கல்லு எல்லாம் பறந்து வந்து விழுகுது!


2 Comments:

Blogger கண்மணி/kanmani said...

வெரி நைஸ் உங்க ஐடியா.

மழலை உங்களுக்கு விருப்பமெனில் எங்கள் குட்டீஸ் பக்கம் பிலாக்கில் டீம் மெம்பர் ஆகலாம்.பதியலாம்.இல்லை படிக்கவாச்சும் செய்யுங்களேன்.

8:16 AM  
Blogger நாமக்கல் சிபி said...

இதே மாதிரிதான் காதலா காதலா படத்துல கமலஹாசன் செய்வாரு!

நீயும் ஒரு படைப்பாளிதான் மழலை சகா!

(ரொம்ப நாளா காணோமே? தம்பியோட விளையாட நேரம் போதலையா?)

11:41 AM  

Post a Comment

<< Home