மழலைச் சொல்

Sunday, August 10, 2008

அதோ அந்தப் பறவை போல!


நானும் அப்பாவும் எங்களோட ரகசிய இடத்துக்குப் போனோம். அங்க சைக்கிள்லதான் போகணும். அங்க நிறைய மரங்கள், ஒரு ஏரி எல்லாம் இருக்கும். வெயில் அடிச்சிச்சா, அதனால நாங்க ஒரு மரத்துக்குக் கீழ நின்னோம். அப்ப நாங்க பேசிக்கிட்டோம்:

நா: இந்த ஏரியில குளிக்க முடிஞ்சா நல்லா இருக்கும்.
அப்பா: இங்க நீங்க ஆத்துல, ஏரியில குளிக்க முடியாது. ஏன்னா சில நேரம் முதலைகள் இருக்கும். ஆனா இந்தியாவுல, ஈழத்துல நீங்க குளிக்கலாம்.
நா: ஆனா ஈழத்துக்கு நம்ம போக முடியாதே.
அப்பா: ஆமா இப்ப சண்டை நடக்குது. அங்க கூடாத ஆமி நிக்கிது. குண்டெல்லாம் போடுவாங்க. அதனால போமுடியாது.
நா: சண்டை எப்ப முடியும்?
அப்பா: தெரியாது குஞ்சு. புலிகள் எல்லாம் அந்த கூடாத ராணுவத்தை விரட்டின பிறகுதான் அங்க இருக்கவங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். குளத்தில போயி குளிக்கலாம்.
நா: எனக்கு அந்த கூடாத ஆமி மேல விருப்பம் இல்ல. குண்டு போடுறது விருப்பம் இல்ல.
அப்பா: எல்லாருக்கும் அதுதான் குஞ்சு வேணும். உலகத்துல சண்டை இல்லாம, வெடி குண்டு இல்லாம, எல்லாரும் அன்பா இருக்கணும்.
நா: நா பெரிய பிள்ளையா வந்த பிறகு ஒரு recycle ஆளா மாறி, எல்லா fighter jets, வெடிகுண்டு எல்லாத்தையும் உருக்கிடுவேன்.
அப்பா: குஞ்சு, அதுக்கு நீங்க recycle ஆளா வரக்கூடாது. ஒரு பெரிய political scientist அல்லது
நா: ஒரு கவர்னர் அப்படி.
அப்பா: ஆமா, ஒரு பெரிய அதிகாரம் இருக்கணும் அப்பதான் 'நமக்கு இந்த துப்பாக்கி, குண்டு எல்லாம் வேண்டாம், அமைதியா இருப்போம்னு சொல்லி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்.
நா: ஆமா, ஆமா. நா சொல்லுவேன், we do not want fighter jets, we dont want bombers, no more guns, thank you.
அப்பா: நல்லது குஞ்சு. அதுக்குத்தான் நான் சொல்லுவேன் நீங்க துப்பாக்கி விளையாட்டு விளையாடக் கூடாதுன்னு.
நா: சரி அப்பா, நா இப்ப மூணு வார்த்தை சொல்றேன், I Dont Like Guns. Actually அப்பா, அது நாலு வார்த்தை.

அப்புறமா நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுல விளாடும்போது நா "ஒரே வானிலே, ஒரே வானிலே" அப்படின்னு பாடினேன். எங்க கேட்டிங்க இந்தப் பாட்டைன்னு எல்லாம் கேட்டாங்க. நா ஒரு பஸ்சில் அந்தப் பாட்டைக் கேட்டேன். நீங்களும் கேளுங்க!

2 Comments:

Anonymous Anonymous said...

இப்படி மழலைகளினது மொழியை பெரியவர்கள் நாங்கள் கொஞ்சம் காது கொடுத்துப் பொறுமையாகக் கேட்டாலே போதும். அமைதியாய் சுமூகமாய் உலகமும் இருக்கும், நாங்கள் நிம்மதியாய் வாழலாம்.
மழலையின் கனவுகள் நிறைவேற இப்போதே என் வாழ்த்தும்.

7:13 PM  
Blogger மழலை said...

நன்றி டிஜே அண்ணா!
உங்களுக்கு விருது கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்! அதையும் என்னை மாதிரி குழந்தைகளுக்குக் கொடுத்ததிற்கு இன்னும் நிறைய்ய்யா நன்றி!

4:37 AM  

Post a Comment

<< Home