மழலைச் சொல்

Sunday, April 29, 2007

வீட்டுக்குள்ள வானவில் வந்திச்சு

காலையில நானும் அப்பாவும் படிச்சுக் கொண்டு இருந்தமா. அப்ப அம்மா எங்களைக் கூப்பிட்டு அங்கெ பாருங்க வானவில் எண்டு காட்டினாங்க. அது சுவத்தில இருந்திச்சு. அப்பா அதைப் படம் எடுத்தாங்க.
இங்கெருந்துதா வருது எண்டு ஒரு குறுந்தகட்டைக் காட்டினாங்க. சூரிய ஒளி அதில பட்டு ஏழு நிறங்களா மாறிடுச்சுன்னு சொன்னாங்க. அப்ப நா குறுந்தகட்டைத் திருப்பினேனா, உடனே இப்படி இப்படி எல்லாம் வித விதமா வானவில் வந்திச்சு. நா திருப்பத் திருப்ப அப்பா படம் எடுத்தாங்க.



பாத்தீங்களா, எங்கட வீட்டுக்குள்ள வானவில் வந்ததை?!

3 Comments:

Blogger Thangamani said...

நல்ல அழகான வானவில் மழலை!

4:57 PM  
Blogger மு.மயூரன் said...

வானவில்லில என்னென்ன நிறமெல்லாம் இருக்கும் சொல்லுங்க பாப்பம்?

9:41 PM  
Blogger மழலை said...

எல்ல்ல்லா நிறங்களும் அதுக்குள்ளயே இருக்காம் மயூரன் அண்ணா:))
நா சொல்லுறது சரிதானே தங்கமணி அண்ணா?!

10:26 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home