மழலைச் சொல்

Saturday, July 28, 2007

பெரிய பிள்ளையா வரணும்

நா பெரிய பிள்ளையா வந்திட்டன். ஆமா, எனக்கு இப்ப அஞ்சு வயசு. எனக்குப் பெரிய பிள்ளையா, அப்பா அளவுக்கு வரணும் எண்டு ஆசையா கிடக்கு. அண்டக்கி நானே என்னோட படுக்கையில படுத்துக் கொண்டென். எனக்குப் பொறுப்பு வரணும் எண்டு அம்மாவும் அப்பாவும் சொல்லுறாங்க. சரி எண்டு சொல்லிப்போட்டு எண்ட குழப்படியை ஆரம்பிக்கிறென்.

எனக்குத் தங்கச்சி விருப்பம். ஆனா அவங்களை நா அப்பைக்கு அப்ப, வம்பு இழுத்துக்கொண்டு இருப்பென். கூடாது எண்டு தெரியும் ஆனாலும் எண்ட குறும்பு அப்படி ஆக்கிரும். ஏன் இப்படி செய்யிறீங்க எண்டு அம்மா அப்பா கேட்டா, நா அப்படித்தான் இருக்கென் எண்டு சொல்லுவென்.

இண்டக்கி என்னொட நண்பர்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நண்பர்கள் எண்டா நல்ல விருப்பம். வெயிலில ஓடுவென், சைக்கிள் ஓட்டுவென், பந்து அடிப்பென். அப்புறம் கொஞ்சம் பாடமும் படிப்பென். என்ன தம்பி பள்ளிக்கூடம் போறிங்களா எண்டு எல்லாரும் கேக்கிறாங்க. ஆனா நா இன்னம் போகலை. இனிமேலதான் போவென்.

நா நிறைய படம் எடுப்பென். அழகா இருக்கே எண்டு எல்லாம் சொல்லுவாங்க. இப்ப கெமராவில பேட்டரி தீந்து போயிடுச்சி. இது நா ஒரு கண்ணாடிக் குவளைக்கு உள்ள வச்சி எடுத்த படம்.