பெரிய பிள்ளையா வரணும்

எனக்குத் தங்கச்சி விருப்பம். ஆனா அவங்களை நா அப்பைக்கு அப்ப, வம்பு இழுத்துக்கொண்டு இருப்பென். கூடாது எண்டு தெரியும் ஆனாலும் எண்ட குறும்பு அப்படி ஆக்கிரும். ஏன் இப்படி செய்யிறீங்க எண்டு அம்மா அப்பா கேட்டா, நா அப்படித்தான் இருக்கென் எண்டு சொல்லுவென்.
இண்டக்கி என்னொட நண்பர்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நண்பர்கள் எண்டா நல்ல விருப்பம். வெயிலில ஓடுவென், சைக்கிள் ஓட்டுவென், பந்து அடிப்பென். அப்புறம் கொஞ்சம் பாடமும் படிப்பென். என்ன தம்பி பள்ளிக்கூடம் போறிங்களா எண்டு எல்லாரும் கேக்கிறாங்க. ஆனா நா இன்னம் போகலை. இனிமேலதான் போவென்.

6 Comments:
குட்டிப்பையா, ஒழுங்கா படிச்சு அப்பா,அம்மாக்கு நல்ல பேரு வாங்கி குடு ராசா.
Hi! Mazhalai Thambi! Romba Nala Parka Mudiyalai!
How Are You?
முயற்சி செய்யிறென் தாமோதர் சந்துரு அண்ணா!
சிபி அண்ணா,
அதுவா? ரொம்ப விளையாட்டாப் போயிட்டுது:))
வாழ்த்துக்கள் மழலை.
நன்றி பத்மா அக்கா!
தம்பீ நல்லா இருக்கியாடா?
இந்தப் பக்கம் பார்த்தே ரொம்ப நாளாச்சே... என்ன நண்பர்களோட சேர்ந்து ஒரே ஜாலிதானா?
ஃபோட்டோ எல்லாம் நல்லா வந்துருக்கே... அடிக்கடி புகைப்படமெடுத்து அண்ணன்கள் கிட்டயெல்லாம் காட்டுடோய்... :-)
Post a Comment
<< Home