மழலைச் சொல்

Sunday, December 16, 2007

நம்பளோட பள்ளிக்கூடம்


இதான் நம்பளோட பள்ளிக்கூடம். எனக்கு அங்க இருக்கது விருப்பம். நம்பளோட 24 பிள்ளைங்கள் இருக்காங்க நம்மளோட வகுப்புல. 899 பிள்ளைங்க நம்பளோட பள்ளிக்கூடத்துல இருக்காங்க. நம்மளுக்கு கிண்டர்கார்டன் இருக்கு, அப்புறம் நடுநிலைப்பள்ளி இருக்கு. அதுக்கப்புறம் நிறைய பிள்ளைங்க இருக்காங்க. நோவா, கேலப், எல்லாப் பிள்ளைங்களும் என்னோட நண்பர்கள். ஆனா ஈதன் மட்டும் இல்ல. ஏன்னா ஈதன் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்படின்னு செய்வாங்க. அதுக்குத்தான் அவங்க எனக்கு விருப்பம் இல்ல. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வர்றது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. முதல் நாள் அம்மா அப்பா வந்தாங்க என்னை விடுறதுக்கு. எனக்கு நிறைய பென்னி (penny) கிடைக்கும். நா பள்ளிக்கூடத்துல நல்ல பையனா இருக்கேன்!! அதுக்குத்தான் பென்னி கிடைக்கும். நா ரொம்ப தெம்பு. நா வந்து விளாடுவேன். நா வந்து சாக்கர் விளாடுவேன்! நோவா, நா, டிலன், லியம் நிறைய பேர் விளாடுவோம்!& ஷார்க் அட்டாக் (சுறா தாக்கு) விளாடுவோம். நான், லூயிஸ், ஜேக்கப் எல்லாரும் தண்ணிக்குள்ள இருப்போம். நம்ம சுறாவா மாறுவோம். நம்ம லூயிஸைத் தாக்க வருவோம். அவர்தான் ஆள். நம்ம வந்து பைரட்ஸ் விளாடுவோம். அது ரொம்ப விருப்பம் இல்லை xxxx @@ அது எனக்கு விருப்பமேஏஏஏஏஏஏஏ இல்ல. பள்ளிக்கூடத்துல சாப்பாடு நல்லாருக்கும். ஆனா சிலது கொழுப்பு. அதை மட்டும் சாப்பிட்டுறாதீங்க!

5 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

Nice School & Post.

Keep it up Mazhalai kutti!

7:43 PM  
Blogger மழலை said...

நன்றி சிபி அண்ணா!

11:01 PM  
Blogger thiru said...

பள்ளிக்கூடத்துக்கு நானும் வரட்டா சகா? என்னையும் விளையாட சேர்த்துக்குவீங்களா?

1:15 AM  
Blogger மழலை said...

கண்டிப்பா வாங்க திரு அண்ணா. ஆனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டு மட்டும் கத்திடாதீங்க!

6:19 AM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

பள்ளிக்கூடக் கதை நல்லாருக்கு. இப்போ விடுமுறையா? நேரமிருந்தா இன்னும் எழுதுங்க குட்டித்தம்பி

8:51 PM  

Post a Comment

<< Home