ஒரு நாள் ஒரு இஞ்சி ரொட்டி வீட்டை (ginger bread house) நம்மளோட பள்ளிக்கூடத்துல செஞ்சோம். சந்தோஷமா இருந்துச்சு. சில அம்மாக்கள் வந்தாங்க, உதவி செய்றதுக்கு. நம்மளோட ஆசிரியரும் அங்க இருந்தாங்க. ரெண்டு ஆசிரியர்கள் இருந்தாங்க. ஒரு தட்டை எடுத்தோம். அது பனி மாதிரி வெள்ளையா இருந்துச்சு. ஒரு பால் பெட்டிய எடுத்தோம். சூடான பசையால தட்டோட சேத்து ஒட்டுனோம். அந்த ஐசிங் எனக்குக் கையில பிடிச்சிருச்சு.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு கையை உதறினேன். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ காம் டவுன் தம்பி" அப்படின்னு ஆசிரியர் சொன்னாங்க. ரொட்டியோட ஒட்டினேன். ஆனா அதை ஆசிரியர்தான் செஞ்சாங்க. நோ ஃபேர்!!!!!! (No fair!). ஆனா நம்ம செஞ்சா சுட்டுரும். அதனாலதான் ஆசிரியர் செஞ்சாங்க. அப்புறம் முட்டாய் எல்லாம் நாங்க வச்சோம். அதை சாப்பிடலை. ஏன்னா அதுல ஔ.....பசை இருக்கு. அது சாப்பிடக் கூடாத பசை. அப்புறம் அதை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். நா பள்ளிப் பேருந்துல வந்தேன். யாரோ என்னோட வீட்டைப் பாத்து "வாவ், நீங்க செஞ்சீங்களா?"ன்னு கேட்டாங்க. நா "ஆமா, நன்றி"ன்னு சொன்னேன்.
கண்மணி அக்கா, கண்டிப்பா வாங்க:) துளசி அத்தை, You can't catch me I'm a ginger bread man அப்படின்னு பாடிக்கிட்டு ஓடிப் போயிட்டாங்க !!!!!!!!!!!!!!!!!! ராகவன் அண்ணா, நன்றி. எங்க ஆசிரியர் நல்லா உதவி செஞ்சாங்க:)
4 Comments:
ரொம்ப அருமையாஇருக்கு உங்க வீடு
நான் குடியிருக்க வரலாமா குட்டீ;)
Very nice.
No Ginger Bread man?
Merry Christmas Mazhalai.
இஞ்சி ரொட்டி வீடு ரொம்ப அழகாயிருக்கு. :) நல்லா செஞ்சிருக்கீங்க.
கண்மணி அக்கா, கண்டிப்பா வாங்க:)
துளசி அத்தை, You can't catch me I'm a ginger bread man அப்படின்னு பாடிக்கிட்டு ஓடிப் போயிட்டாங்க !!!!!!!!!!!!!!!!!!
ராகவன் அண்ணா, நன்றி. எங்க ஆசிரியர் நல்லா உதவி செஞ்சாங்க:)
Post a Comment
<< Home