எனக்கு அழுகை வருது

நான் அழுகிறென். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விளங்கலெ. ஏன் அழுகிறேனெண்டு என்னால சொல்ல முடியாது. முதுகில கடிக்கிறது (அரிக்கிறது), பலூன் உடையுறது, இருட்டு எல்லாத்தையும் பார்த்து அழுகிறென். இந்த ஊரு நண்பர்களும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் கத்துக் கொடுத்தாங்க, தங்கச்சி அழுகிறப்ப அம்மாவும் அப்பாவும் தூக்குறாங்க, அதனாலதான் நான் அழுது அவங்கட கவனத்தை வேண்டுறேன் எண்டு அம்மாவும், அப்பாவும் பேசிக் கொள்கிறாங்க. சில நேரம் விளையாட்டுக் காட்டுறாங்க. சில நேரம் பேசிப் பேசிச் சொல்லுறாங்க. சில நேரம் கண்டிப்பா சொல்லுறாங்க. நானும் சில நேரம் கேப்பென், சில நேரம் கேட்க மாட்டென். அழுகிறது எனக்குப் பிடிக்கலைதான். ஆனாலும் சில நேரம் நான் அழுகிறென். படத்தில அழுகிறது நான் இல்ல!
4 Comments:
:(
//அழுகிறது எனக்குப் பிடிக்கலைதான். ஆனாலும் சில நேரம் நான் அழுகிறென்//
:))
ஆகா நம்ம ஆளு....சூப்பர் பிரண்டெய்...நம்ம சங்கத்துல சேர்ந்துக்கறியா....
பெரியவங்க என்ன வேணாலும் சொல்லட்டும், அழுவது நமது பிறப்புறிமைடா கண்ணா.( உன் பேர் என்ன?)
சிபி அண்ணா, சுகமா?
நீங்க ஒண்டும் கவலைப்பட வேண்டா. :))
பேபி பவன், சங்கமா அப்படியெண்டால்?
நிலா,
//கண்ணா.( உன் பேர் என்ன?)//
அதான் சொல்லிட்டிங்களே :))
Post a Comment
<< Home