Tele எண்டா தொலை

அப்போ நா கேட்டேன் "நச்சத்திரம், அம்புலி எல்லாத்தையும் தொலைநோக்கி புடிச்சு கிட்ட இழுத்துக்கிட்டு வருமா?"
"இல்ல குட்டி, தொலைநோக்கியில இருக்க கண்ணாடியெல்லாம் சேந்து நமக்கு அப்படி கிட்டக்க தெரியும்."
"Telescopeன்னா தொலைநோக்கி
Telephoneன்னா தொலை பேசி
Televisionன்னா தொலைக் காட்சி
அப்போ Teleன்னா என்னா?"ன்னு அப்பா கேட்டாங்க.
நா சொன்னேன் "தொலை!"
அப்புறம் நா யோசிச்சுட்டு சொன்னேன், "Teletubbies!"
அப்பா சிரிச்சுட்டு கேட்டாங்க, "அப்படின்னா என்ன குஞ்சு?"
"அது தெரியும், ஆனா எங்கயும், தூஊஊஊரத்திலயும் இருக்காது,"ன்னு சொன்னேன்.
"ஓ டெலிடபிஸ் நிஜமா இருக்காதா?"ன்னு அப்பா கேட்டாங்க.
"இல்லை. அது ஒரு friendly monster. தொலைக்காட்சியில தெரியும். ஆனா நிஜமா அப்படி யாரும் இருக்க மாட்டாங்க,"ன்னு நா சொன்னேன்.