அப்படித்தான் சொல்லுவாங்க
வேற வேற ஆக்களா மாறி விளாடுறது எனக்கு விருப்பம். சில நேரம் நா அப்பாவா மாறிடுவேன். அப்பா குஞ்சா மாறிடுவாங்க. இல்லாட்டி நா Fred. அப்பாதான் Bill. Fred, Bill எல்லாம் அப்பாவோட வேலை செய்றாங்க. சில நேரம் நாந்தான் சின்ன தீயணைப்பு வீரர், அம்மாதான் பெரிய தீயணைப்பு வீரர். ஊய்ய்ய்ங் ஊய்ய்ய்ய்ங் அப்படீன்னு கத்திக்கிட்டே ஓடுவோம்.
ஒரு நாள் நா அப்பாவா இருந்தேன். அப்பா குஞ்சா இருந்தாங்க. அப்போ நா விறுவிறு எண்டு கிளம்பிக்கொண்டே "குஞ்சு நா சீக்கிரம் வேலைக்கிப்போணும், இன்னக்கி ஒரு மீட்டிங் இருக்கு" அப்படின்னு சொன்னேன். உடனே அப்பா எனக்குக் குறுக்கெ கையை நீட்டிக்கொண்டு "இல்லை அப்பா நீங்க இப்ப போக்கூடாது"ன்னு சொன்னாங்க. அதுக்கு நா சொன்னேன் "இல்ல குஞ்சு அங்க Bill எல்லாரும் காத்திருப்பாங்க, நா போகணும், சாயங்காலம் வந்து விளாடுறேன், சரியா?" அப்படின்னு சொன்னேன். அப்பாக்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க.

5 Comments:
:) அப்பாவுடைய பஸ் பச்சை நிறத்தில் இருக்குமா தம்பி? செகப்பு இல்லையா?
படகு அக்கா,
அப்பாட பஸ் வெள்ளை நிறம், பச்சை கோடு போட்டிருக்கும் :)
படகு அக்கா! எல்லா ஊர் பஸ்ஸும் சிகப்பு கலர்ல இருக்காது!
எண்டு சொல்லிட்டு நான் சிரிசிரியெண்டு சிரிப்பேன்!
// அப்படின்னு சொன்னேன். அப்பாக்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க//
நல்ல அப்சர்வேசன்!
சிபி அண்ணா, நீங்க ஊருக்குப்போனிங்களா?
உங்க எல்லா காமெண்ட்டுக்கும் நன்றி. உங்களொட காத்து பதிலுக்கு சிரிச்சென்.
Post a Comment
<< Home