மழலைச் சொல்

Sunday, December 16, 2007

நம்பளோட பள்ளிக்கூடம்


இதான் நம்பளோட பள்ளிக்கூடம். எனக்கு அங்க இருக்கது விருப்பம். நம்பளோட 24 பிள்ளைங்கள் இருக்காங்க நம்மளோட வகுப்புல. 899 பிள்ளைங்க நம்பளோட பள்ளிக்கூடத்துல இருக்காங்க. நம்மளுக்கு கிண்டர்கார்டன் இருக்கு, அப்புறம் நடுநிலைப்பள்ளி இருக்கு. அதுக்கப்புறம் நிறைய பிள்ளைங்க இருக்காங்க. நோவா, கேலப், எல்லாப் பிள்ளைங்களும் என்னோட நண்பர்கள். ஆனா ஈதன் மட்டும் இல்ல. ஏன்னா ஈதன் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்படின்னு செய்வாங்க. அதுக்குத்தான் அவங்க எனக்கு விருப்பம் இல்ல. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வர்றது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. முதல் நாள் அம்மா அப்பா வந்தாங்க என்னை விடுறதுக்கு. எனக்கு நிறைய பென்னி (penny) கிடைக்கும். நா பள்ளிக்கூடத்துல நல்ல பையனா இருக்கேன்!! அதுக்குத்தான் பென்னி கிடைக்கும். நா ரொம்ப தெம்பு. நா வந்து விளாடுவேன். நா வந்து சாக்கர் விளாடுவேன்! நோவா, நா, டிலன், லியம் நிறைய பேர் விளாடுவோம்!& ஷார்க் அட்டாக் (சுறா தாக்கு) விளாடுவோம். நான், லூயிஸ், ஜேக்கப் எல்லாரும் தண்ணிக்குள்ள இருப்போம். நம்ம சுறாவா மாறுவோம். நம்ம லூயிஸைத் தாக்க வருவோம். அவர்தான் ஆள். நம்ம வந்து பைரட்ஸ் விளாடுவோம். அது ரொம்ப விருப்பம் இல்லை xxxx @@ அது எனக்கு விருப்பமேஏஏஏஏஏஏஏ இல்ல. பள்ளிக்கூடத்துல சாப்பாடு நல்லாருக்கும். ஆனா சிலது கொழுப்பு. அதை மட்டும் சாப்பிட்டுறாதீங்க!

Saturday, December 15, 2007

இஞ்சி ரொட்டி வீடு

ஒரு நாள் ஒரு இஞ்சி ரொட்டி வீட்டை (ginger bread house) நம்மளோட பள்ளிக்கூடத்துல செஞ்சோம். சந்தோஷமா இருந்துச்சு. சில அம்மாக்கள் வந்தாங்க, உதவி செய்றதுக்கு. நம்மளோட ஆசிரியரும் அங்க இருந்தாங்க. ரெண்டு ஆசிரியர்கள் இருந்தாங்க.
ஒரு தட்டை எடுத்தோம். அது பனி மாதிரி வெள்ளையா இருந்துச்சு.
ஒரு பால் பெட்டிய எடுத்தோம். சூடான பசையால தட்டோட சேத்து ஒட்டுனோம். அந்த ஐசிங் எனக்குக் கையில பிடிச்சிருச்சு.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு கையை உதறினேன். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ காம் டவுன் தம்பி" அப்படின்னு ஆசிரியர் சொன்னாங்க. ரொட்டியோட ஒட்டினேன். ஆனா அதை ஆசிரியர்தான் செஞ்சாங்க. நோ ஃபேர்!!!!!! (No fair!). ஆனா நம்ம செஞ்சா சுட்டுரும். அதனாலதான் ஆசிரியர் செஞ்சாங்க. அப்புறம் முட்டாய் எல்லாம் நாங்க வச்சோம். அதை சாப்பிடலை. ஏன்னா அதுல ஔ.....பசை இருக்கு. அது சாப்பிடக் கூடாத பசை. அப்புறம் அதை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். நா பள்ளிப் பேருந்துல வந்தேன். யாரோ என்னோட வீட்டைப் பாத்து "வாவ், நீங்க செஞ்சீங்களா?"ன்னு கேட்டாங்க. நா "ஆமா, நன்றி"ன்னு சொன்னேன்.

Monday, November 12, 2007

செல்கள்


என்னோட அப்பா புடிக்கும். என்னோட அப்பா எனக்கு ரொம்ப புடிக்கும். என்னோட அப்பா நல்லா சாக்கர் விளாடுவாங்க. அவங்க சாக்கர்ல வந்து ரொம்ப நல்லா இருக்காங்க. என்னோட அப்பா, நல்லா போவாங்க. அப்பா வந்து, நிறைய நுண்ணோக்கில கண்டுபிடிப்பாங்க. ஒரு நுண்ணோக்கி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கண்ணுக்குத் தெரியாத செல்ஸ்ஐ வந்து பாக்க வைக்கும். சில செல்ஸ் நல்லது. வெள்ளை செல்கள் நல்லது. சிவப்பு செல்கள் நல்லது. சில சிவப்பு செல்கள் காதுக்குள்ள இருக்கும். அது ரொம்ப கூடாதது. அது வலிக்கும். எனக்கு ஒன்னு இருந்துச்சு. நா வந்து, பள்ளிக்கூடத்துல இருக்க டாக்டர் ஆபிசுக்குப் போனேன். ஊசியெல்லாம் போடலை. லை லை லை லை. நல்லா இருந்தாங்க அந்த நர்ஸ். எனக்கு விருப்பம் அந்த நர்ஸ். அந்த நர்ஸ் எனக்கிட்ட நல்லா பார்த்தாங்க, காதுக்குள்ள. கொஞ்சம் இளஞ்சிவப்பு இருந்துச்சு. என்னோட சிவப்பு செல் கீழ கீழ கீழ கீழ வக்கிது. அது ரொம்ப வலியா இருந்துச்சுன்னா செல் வந்து ரொம்ப சிவப்பா இருக்கும். அந்த சிவப்பு செல் கூடாதது. சில சிவப்பு செல் நல்லது. வெள்ளை செல் கூடாத பச்சை பாக்டீரியா எல்லாம் வந்து எடுத்துரும்.

Sunday, November 11, 2007

எனக்கு அழுகை வருது


நான் அழுகிறென். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விளங்கலெ. ஏன் அழுகிறேனெண்டு என்னால சொல்ல முடியாது. முதுகில கடிக்கிறது (அரிக்கிறது), பலூன் உடையுறது, இருட்டு எல்லாத்தையும் பார்த்து அழுகிறென். இந்த ஊரு நண்பர்களும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் கத்துக் கொடுத்தாங்க, தங்கச்சி அழுகிறப்ப அம்மாவும் அப்பாவும் தூக்குறாங்க, அதனாலதான் நான் அழுது அவங்கட கவனத்தை வேண்டுறேன் எண்டு அம்மாவும், அப்பாவும் பேசிக் கொள்கிறாங்க. சில நேரம் விளையாட்டுக் காட்டுறாங்க. சில நேரம் பேசிப் பேசிச் சொல்லுறாங்க. சில நேரம் கண்டிப்பா சொல்லுறாங்க. நானும் சில நேரம் கேப்பென், சில நேரம் கேட்க மாட்டென். அழுகிறது எனக்குப் பிடிக்கலைதான். ஆனாலும் சில நேரம் நான் அழுகிறென். படத்தில அழுகிறது நான் இல்ல!

Saturday, July 28, 2007

பெரிய பிள்ளையா வரணும்

நா பெரிய பிள்ளையா வந்திட்டன். ஆமா, எனக்கு இப்ப அஞ்சு வயசு. எனக்குப் பெரிய பிள்ளையா, அப்பா அளவுக்கு வரணும் எண்டு ஆசையா கிடக்கு. அண்டக்கி நானே என்னோட படுக்கையில படுத்துக் கொண்டென். எனக்குப் பொறுப்பு வரணும் எண்டு அம்மாவும் அப்பாவும் சொல்லுறாங்க. சரி எண்டு சொல்லிப்போட்டு எண்ட குழப்படியை ஆரம்பிக்கிறென்.

எனக்குத் தங்கச்சி விருப்பம். ஆனா அவங்களை நா அப்பைக்கு அப்ப, வம்பு இழுத்துக்கொண்டு இருப்பென். கூடாது எண்டு தெரியும் ஆனாலும் எண்ட குறும்பு அப்படி ஆக்கிரும். ஏன் இப்படி செய்யிறீங்க எண்டு அம்மா அப்பா கேட்டா, நா அப்படித்தான் இருக்கென் எண்டு சொல்லுவென்.

இண்டக்கி என்னொட நண்பர்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நண்பர்கள் எண்டா நல்ல விருப்பம். வெயிலில ஓடுவென், சைக்கிள் ஓட்டுவென், பந்து அடிப்பென். அப்புறம் கொஞ்சம் பாடமும் படிப்பென். என்ன தம்பி பள்ளிக்கூடம் போறிங்களா எண்டு எல்லாரும் கேக்கிறாங்க. ஆனா நா இன்னம் போகலை. இனிமேலதான் போவென்.

நா நிறைய படம் எடுப்பென். அழகா இருக்கே எண்டு எல்லாம் சொல்லுவாங்க. இப்ப கெமராவில பேட்டரி தீந்து போயிடுச்சி. இது நா ஒரு கண்ணாடிக் குவளைக்கு உள்ள வச்சி எடுத்த படம்.

Wednesday, June 27, 2007

ஒயினால் கீறிய படம்

நா தண்ணியைக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ள வைப்பேன். அது உறைஞ்சு பனிக்கட்டியாப் போயிடும். அது crystal, படிகம். ஒரு நாள் அப்பா ஒயின் குடிச்சாங்க. எனக்கு ஒயின் படிகம் எப்படி இருக்கும்னு பாக்க ஆசை வந்திச்சு. அப்பாட்ட ஒயின் கேட்டேன். குளிர்சாதனப் பெட்டில வச்சா ஒயின் படிகம் வராது, ஆனா ஒரு கிண்ணத்தில ஊத்தி ரொம்பநாள் வச்சா வந்தாலும் வரும்னு அப்பா சொன்னாங்க. சரியெண்டு, ஒரு கிண்ணத்த எடுத்து அதில கொஞ்சம் ஒயினை ஊத்தி ஒரு ஓரமா வச்சிட்டோம். ஒரு இருவது நாளு கழிச்சு, எடுத்துப் பாத்தோமா, ஒரு படிகமும் இல்ல. ஆனா ஒயின்ல இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போயி, கொஞ்சம் கொளகொளன்னு இருந்திச்சு. இதுல இனி படிகம் வராதுன்னு நெனக்கிறேன்னு அப்பா சொல்லிட்டாங்க. அப்புறமா, ம்...இது நல்ல நிறமா இருக்கு, இதால படம் கீறுறீங்களான்னு அப்பா கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு கீறினேன். அதான் இது.


ஒயின் கொஞ்சந்தான இருந்திச்சு. அதோட கொஞ்சம் பிரஷ்ல ஒட்டி, பிசுபிசுவெண்டு போச்சா. உடனே அதில என்ன ஊத்தலாம்னு யோசிச்சோம். குளிர்சாதனப் பெட்டியத் திறந்து ஆராய்ஞ்சோமா, இதை ஊத்துவமான்னு கேட்டேன். அப்பாவும் அது சரியான யோசனைனு சொல்லிட்டாங்க. அது vanilla extract. அதுல கொஞ்சம் ஊத்தினவுடனெ, பிசுபிசுன்னு பிரஷ்ல இருந்த ஒயினெல்லாம் கரைஞ்சு நல்லா வந்திடுச்சு. அப்புறமா கீறினது இது. ஒரு பறவை.



அம்மா சொன்னாங்க, இது ரெண்டு பக்கமும் பறக்கிற மாதிரி இருக்குன்னு. அப்புறம் இன்னும் கொஞ்சம் vanilla extract ஊத்தி கீறினது இது. ஒரு எரிமலை, பாத்தீங்களா கல்லு எல்லாம் பறந்து வந்து விழுகுது!


Sunday, April 29, 2007

வீட்டுக்குள்ள வானவில் வந்திச்சு

காலையில நானும் அப்பாவும் படிச்சுக் கொண்டு இருந்தமா. அப்ப அம்மா எங்களைக் கூப்பிட்டு அங்கெ பாருங்க வானவில் எண்டு காட்டினாங்க. அது சுவத்தில இருந்திச்சு. அப்பா அதைப் படம் எடுத்தாங்க.
இங்கெருந்துதா வருது எண்டு ஒரு குறுந்தகட்டைக் காட்டினாங்க. சூரிய ஒளி அதில பட்டு ஏழு நிறங்களா மாறிடுச்சுன்னு சொன்னாங்க. அப்ப நா குறுந்தகட்டைத் திருப்பினேனா, உடனே இப்படி இப்படி எல்லாம் வித விதமா வானவில் வந்திச்சு. நா திருப்பத் திருப்ப அப்பா படம் எடுத்தாங்க.



பாத்தீங்களா, எங்கட வீட்டுக்குள்ள வானவில் வந்ததை?!