அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

என்னயக் கூப்பிட்டுப் பாடச் சொன்னாங்க. அப்பாவும் என்னொட மேடைக்கி வந்தாங்க. வந்து மைக்கைப் பிடிச்சுக் கொண்டாங்க. நா வந்து அகர முதல, குழல் இனிது யாழ் இனிது திருக்குறள் ரெண்டும் சொல்லிப்போட்டு, ரெண்டு பாட்டுப் பாடினென். அதான் துடுப்பிடு துடுப்பிடு பிறகு மின்னி மின்னி விண்மீனே. அது ரெண்டையும் English அப்புறம் தமிழ்ல பாடினேன்.
பாடினத்துக்குப் பிறகு அப்பா இன்னொரு பாட்டு பாடச் சொல்லி மைக்கை நீட்டினாங்க. நா சொன்னேன், "எனக்கு ஒன்னுக்கு வருது", எண்டு. எல்லாரும் சிரிச்சாங்க. அப்பாவும் சிரிச்சுப்போட்டு, இதப் பாடி முடிச்ச பிறகு போலாமெண்டு சொன்னாங்க. சரியெண்டு நா அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பாட்டப் பாடினென். இங்கெ போயி அதை நீங்களும் கேட்கிறிங்களா?
எல்லாப் பாட்டும் பாடி முடிச்ச பிறகு எனக்கு ஒரு பரிசு குடுத்தாங்க. அது ஒரு கார் புத்தகம்!
7 Comments:
சரி, மாசிலா அண்ணா, இன்னும் பாடுவேன். எண்ட எல்லாப் பாட்டையும் கேக்கணுமெண்டா, நீங்க இங்க போங்க.
putfile.com/mazhalai
நன்றி!
அச்சச்சோ, மாசிலா அண்ணை எழுதின கமெண்ட் காணாமப் போச்சி. அது இதா:
மாசிலா has left a new comment on your post "மின்னி மின்னி விண்மீனே":
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு குட்டி பையா! நல்ல சாமர்த்தியமா பாடுறாயே. தொடர்ந்து இன்னும் நெறைய பாடினு வா.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" பாட்ட ரொம்ப திறமையா பாடி இருக்கியே!
சபாஷ் கண்ணு. நீ சாமர்த்தியசாலி. இன்னும் தொடர்ந்து நெறைய பாடினு, எழுதினு வா.
உன் செய்தி தெரிஞ்சிக்க ஆசை ஆசையா இருக்கு.
குட்டி தம்பிக்கு கட்டி முத்தம்!
எல்லா பாட்டையும் கேட்டுட்டேன்.
அருமையா இருக்குது குட்டி தம்பி.
"நந்தவனத்தில் ஒரு ஆண்டி" நல்லா ராகமா பாடி இருக்கியே.
எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.
இன்னும் நிறைய செய்துனு வா.
என் செல்ல தம்பி, சக்கர கட்டிக்கு கட்டி முத்தம்.
மழலை,
அக்கினிக்குஞ்சு பாட்டை மிக நன்றகா பாடியுள்ளீர்கள். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பாடல்கள் அருமையாய் இருந்தன!
சமர்த்து!
வருங்கால பாடகர் வாழ்க!
இப்படிக்கு,
வருங்கால பாடகரின் நிகழ்கால ரசிகன்.
Maasilaa anna, Yarlthamizan anna, Sibi anna, ellorukkum periya nanRi.
Post a Comment
<< Home