மழலைச் சொல்

Wednesday, October 18, 2006

ஒரு பெரிய பையனின் படுக்கை

என்னைச் சின்னப் பிள்ளைன்னு சொன்னா எனக்குப் பிடிக்காது. ஏன்னா நா பெரிய பையனா வந்திட்டேன். சின்னப் பிள்ளைங்களோட பொம்மையெல்லாம் பாத்தா "இதெல்லாம் சின்னப் பிள்ளைங்க விளாடுறது"ன்னு சொல்லுவேன். நா ஒரு நாள் பாட்டியோட இருந்து American Funny Videos பாத்தேன். அப்புறம் ராவில தூங்கப் போறப்ப அம்மா கேட்டாங்க, "குஞ்சு நீங்கதான் பெரிய பிள்ளையா வந்துட்டீங்க, பெரிய ஆக்களோட டி.வி ப்ரோக்ராம் எல்லாம் பாக்குறீங்க, அப்புறம் ஏன் நீங்க பெரிய பிள்ளைங்க மாதிரியே உங்களோட கட்டில்ல தனியாப் படுக்கக் கூடாது?" இது எனக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை. அது என்னை மாதிரியே வளருற படுக்கைதான். நா சின்னப் பிள்ளையா இருந்தப்ப சின்னதா இருந்திச்சு, பெரிய பையனா வந்தப்புறம் பெரிசாயிடுச்சு. ஆனாலும் எனக்கு அப்பாம்மாவோட சேர்ந்து தூங்கத்தான் விருப்பம். தூங்கினப்புறம் தனியே தூக்கிப் போட்டாலும் நடுவில முழிச்சு ஓடி வந்துடுவேன். அப்ப நா சொன்னேன் "அம்மா, நா அதைப் (வீடியோவை) பாக்கணும்னு பாக்கலை, சும்மாதான் பாத்தேன்". அப்புறம் சொன்னேன் "அம்மா, நீங்களும் அப்பாவும்தான் உலகத்திலயே நல்ல அம்மா அப்பா." என்ன சொன்னா என் வேலை நடக்கும்னு எனக்குத் தெரியும்!

4 Comments:

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//என்ன சொன்னா என் வேலை நடக்கும்னு எனக்குத் தெரியும்!//

இது!!! :O))

3:59 PM  
Blogger Santhosh said...

ஓ அம்மா தான் உலகத்துலேயே நல்ல அம்மாவா? இந்த குட்டி வளர்ந்த பையன் ரொம்ப நல்ல பையன் ஆயிட்டே வரானே? அடடா

5:57 PM  
Blogger பெத்தராயுடு said...

நீங்கதான் சமர்த்துப் பிள்ளை.

6:03 PM  
Blogger கலை said...

மழலைத் தம்பி! நீங்க இங்க எழுதி இருந்ததை வாசிச்சிட்டு அம்மா எனக்கு சொன்னா.

நானும் இதே மாதிரித்தான் எல்லாத்துக்கும் நான் இப்ப பெரிய பிள்ளை எண்டு சொல்லுவன். ஆனா, மட்டும் படுக்கப் போறது அம்மா, அப்பாவோடதான். :) எனக்கும் அம்மா, அப்பாவோட படுக்கத்தான் நல்ல விருப்பம். இனிமேல்தான் தனிய படுக்க நான் பழக வேணும் எண்டு இருக்கிறன். எனக்கு டிசெம்பரில 8 வயதாகும், அப்ப படுக்கலாம் எண்டு ஐடியா வருது. (அஞ்சலியின் அம்மா சொல்வது > ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இதே ஐடியா வருவது வழமைதான். ஆனால் அமுலுக்கு வராதாம் :)))

நானும் அந்த American Funny Videos பார்ப்பேன். எனக்கும் நல்ல விருப்பம் அது பார்க்க.

எல்லாருக்கும் உலகத்திலேயே நல்ல அம்மா, அப்பா அவங்க அவங்கட அம்மா அப்பா தான் போலயிருக்கு. :)

5:15 AM  

Post a Comment

<< Home