மழலைச் சொல்

Monday, January 15, 2007

தானியக் கூடு

எங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு மரம் இருக்கு. ஒரு நாள் நாங்க கடைக்குப் போயி ஒரு தானியக்கூடும் ஒரு பை நிறைய தானியங்களும் வாங்கிட்டு வந்தோம். தானியக் கூட்டுக்குள்ள நாந்தான் தானியத்தைக் கொட்ட உதவி செஞ்சேன். அப்புறமா அதை மரத்தில தொங்க விட்டோம். முதல்ல பறவைகள்லாம் வந்து சாப்பிடவே இல்ல. அப்புறமா, நிறைய பறவைகள் வந்திச்சு. புறா, கருங்குருவி, blue jays, robin (சிவப்புக் குருவி), சின்னோண்டு குருவி அது பேரு அடைக்கலங்குருவின்னு அம்மா சொன்னாங்க, எல்லாம் காலையில வந்து கீச் மூச்சுன்னு கத்தும். எல்லாப் பறவைகளும் தானியக்கூட்டுல இருந்து கொத்திச் சாப்பிடும். ஆனா புறா மட்டும் கீழ சிந்துகிற தானியத்தைத்தான் கொத்திச் சாப்பிடும். ஆனா ஒரு புறா தானியக் கூட்டில இருந்தும் சாப்பிடும். சில வேளைகளில அணிலும் கீழே வந்து கொறிச்சு கொறிச்சு சாப்பிடும். தானியம் தீர்ந்து போனா மறுபடியும் கொட்டி வைப்போம். இப்பவெல்லாம் தினமும் நிறைய பறவைகள் வரும். மழை பெஞ்சாலும் வரும். வெயில் அடிச்சாலும் வரும். எனக்குப் பறவைகளைப் பார்க்கிறது விருப்பம்.

2 Comments:

Anonymous Anonymous said...

சகா,

எனக்கும் பறவைகள்னா நல்ல விருப்பம். பறவைகளை படம் எடுக்குறது பிடிக்கும் :)

3:35 AM  
Blogger மழலை said...

திரு அண்ணா, நானும் படம் எடுக்கப் போவென். ஆனா கிட்டக்க போனா அது ஓடிப் போயிரும்:)

3:40 AM  

Post a Comment

<< Home