மழலைச் சொல்

Sunday, January 28, 2007

நா ஒரு பெரியண்ணா!

அம்மாவொட முட்டிக்குள்ள இருந்த பாப்பா வெளியால வந்திட்டாங்க. இப்ப நா பெரியண்ணா ஆயிட்டேன். எனக்கு ஒரு ஸ்டிக்கர் குடுத்தாங்க, அதை சட்டையில ஒட்டிக்கொண்டேன். தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கி மடியில கொடுத்தாங்க. வச்சுக்கொண்டு பெரிய ஆக்கள் மாதிரி நானும் பாப்பாவை ஆட்டிப் பாத்தேன். ஆட்டினா பாப்பாவுக்கு வலிக்குமெண்டு சொல்லிட்டாங்க. பாப்பா தூங்கிக் கொண்டே இருக்காங்க. சில நேரம் நா வீட்டுக்குள்ள சத்தம் போடுறென். அப்பதான் பாப்பா முழிப்பாங்க. முழிச்சா நா கிட்டப் போயி கையைப் பிடிச்சுக் கூப்பிடுவேன். ஏனெண்டா பாப்பா என்னோட விளாடணும். அதுக்கு பாப்பா இன்னும் கொஞ்சம் பெரிசா வரணுமெண்டு சொல்லிட்டாங்க. ஒரு நாள் பாப்பாவுக்குச் சோச்சி குடுக்கலாமா எண்டு கேட்டேன். கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. அவங்க பால் மட்டுந்தான், அதுவும் ப்ரிட்ஜில இருக்கது இல்ல, அம்மாட்ட இருந்து மட்டுந்தான் குடிக்கணும் எண்டு சொல்லிட்டாங்க. ஒரு நாள் ஒரு கத்தரிக்கோல் மேசை மேல இருந்திச்சா, அப்பாவக் கூப்பிட்டு, அப்பா, இந்தக் கத்தரிக்கோலை சின்னப் பிள்ளைங்களுக்கு எட்டாத இடத்தில வச்சிருங்க எண்டு சொன்னேன். அப்பாவும் சரி எண்டு சொல்லி வச்சிட்டாங்க. நா பொறுப்பான பெரியண்ணாவா வந்திட்டேன் எண்டு சொன்னாங்க.

19 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

குட்டிப் பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி!

அப்பாவிடமும், அம்மாவிடமும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லு குட்டி!

பொறுப்பான பெரியண்ணா ஆகிட்டதால உனக்கும் என்னோட வாழ்த்துக்கள்!

9:09 AM  
Blogger மழலை said...

நன்றி சிபி அண்ணா:))

9:12 AM  
Blogger நாமக்கல் சிபி said...

அது சரி! சோச்சி எண்டால் என்ன?
கொஞ்சம் சொல்லித் தருகிறாயா?

9:14 AM  
Blogger மழலை said...

@சோச்சி எண்டால் என்ன?@
அதா சோறு. எனக்குத் தயிர் சோச்சி, மீன் சொதி சோச்சி எல்லாம் நல்ல விருப்பம் :))

9:18 AM  
Blogger நாமக்கல் சிபி said...

விளங்கப்படுத்தியதற்கு நன்றி தம்பி!

9:19 AM  
Blogger thiru said...

பொறுப்பான பெரியண்ணாக்கு வாழ்த்துக்கள்! தம்பி பாப்பாக்கும் தான் :))))

9:28 AM  
Blogger மழலை said...

@விளங்கப்படுத்தியதற்கு நன்றி தம்பி!@
:))

நன்றி திரு அண்ணா!
ஆனா அது தங்கச்சிப் பாப்பா! தம்பி இல்ல:)

9:57 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//எனக்குத் தயிர் சோச்சி, மீன் சொதி சோச்சி எல்லாம் நல்ல விருப்பம்//

எனக்கும் இவையெல்லாம் விருப்பமே!

10:05 AM  
Blogger Santhosh said...

//அப்பாவும் சரி எண்டு சொல்லி வச்சிட்டாங்க. நா பொறுப்பான பெரியண்ணாவா வந்திட்டேன் எண்டு சொன்னாங்க.//
:)) ரொம்ப பொறுப்பான பிள்ளையா ஆயிட்டிங்க.
பெரியண்ணாவுக்கும் குட்டிப்பாப்பாக்கும் வாழ்த்துக்கள்.

10:54 AM  
Anonymous Anonymous said...

பெரியண்ணா சொதி எண்டால் என்ன?

11:28 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//பபா said...
பெரியண்ணா சொதி எண்டால் என்ன?
//

பபா! சொதி எண்டால் குழம்பு!

சரிதானே பெரியண்ணா?

12:21 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் தம்பி!

12:22 PM  
Blogger துளசி கோபால் said...

அண்ணே... நல்லா இருக்கீங்களா?
பதவி உயர்வுக்கு வாழ்த்து(க்)கள் :-)))))

3:28 PM  
Anonymous Anonymous said...

பெரியண்ணா ஆகியதற்கு வாழ்த்துக்கள்! :) (உங்க அப்பா அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க)

உங்க வயசில எனக்கும் சோறும் மீன் சொதியுமெண்டா நல்ல விருப்பம். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. ;)

5:22 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//இந்தக் கத்தரிக்கோலை சின்னப் பிள்ளைங்களுக்கு எட்டாத இடத்தில வச்சிருங்க எண்டு சொன்னேன்.//
நல்ல பிள்ளை நீங்க.

தங்கச்சி உங்களக் கண்டதுமே கையக் கால ஆட்டி சந்தோசமாகிருவாங்கதானே?

5:44 PM  
Blogger Thangamani said...

பெரியண்ணா நல்ல அண்ணாவ இருக்கீங்களே!

7:49 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பொறுப்பான பெரியண்ணா ஆகிட்டதுக்கு வாழ்த்துக்கள் மழலைத் தம்பி..

இனிமே உங்களை மழலை எண்டு எப்படிக் கூப்பிடுறது? :)) பேரைச் சொல்லுங்க :)

தங்கச்சிப் பாப்பாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க பெரியண்ணா:)

11:35 PM  
Blogger மழலை said...

சந்தோஷ் அண்ணா, நன்றி!

பபா அண்ணா, சொதி எண்டால் குழம்பும் இல்ல, ரசமும் இல்ல எண்ட மாதிரி ஒரு சாமான். புளி இல்லயெண்டா கொருக்காப் புளி, தேசிப் புளி (எலிமிச்சை) போட்டு வைப்பாங்க. உடம்புக்கு தெம்பு.

சிபி அண்ணா, உங்கட அட்டைக்கும், பலூன் பதிவுக்கும் ரொம்ப நன்றி. அதில நிக்கிறதுதா நீங்களா? :))

அனானிமச், நன்றி! நீங்கதானே அண்டைக்கும் வந்தது?:)

துளசி கோபால் அக்கா, நல்லா இருக்கேன் (அப்படித்தான் போன்ல பேசுறப்ப சொல்லுவென்:))நன்றி.

யாழ்த்தமிழன் அண்ணா, நன்றி! உங்களுக்கு இப்ப மீன் சொதி பிடிக்காதோ?:)

ஆமா மழை அக்கா, தங்கச்சி கையைக் காலை ஆட்டிக்கொண்டே ஊ, ஆ எண்டு கத்துறாங்க. நன்றி!

தங்கமணி அண்ணா, நன்றி! ஹையா ஆனை அக்கா! நன்றி! எம்பேரு மழலைத் தம்பி எண்டா, தங்கச்சி பேரு என்ன, சொல்லுங்க பாப்பம்...மழலைத் தங்கச்சி :))

4:40 AM  
Blogger பெத்தராயுடு said...

மழலைத்தம்பி,

பெரியண்ணாவானதுக்கு வாழ்த்துகள்.

அப்படியே உங்கட பெற்றோருக்கும் எண்ட வாழ்த்துகளைச் சொல்லிப்போடுங்கள்.

9:37 AM  

Post a Comment

<< Home