மழலைச் சொல்

Wednesday, November 22, 2006

பஞ்சுச் செடி

நா நெறைய வெளியிலயே விளாடுவேன். என்னோட கொட்டு வண்டிய எடுத்துக்கிட்டு முழங்கால் வரைக்கும் ஒரு பூட்ஸ் போட்டுக்கொண்டு போவேன். இங்க தினம் வெயில் அடிக்கும். ஆனா அண்டைக்கிக் கொஞ்சம் பனியும் பெஞ்சுது. பக்கத்து வீட்டில எபி எண்டு ஒரு நாய் இருக்கு. அவங்க வீட்டில ஒரு பூனையும் இருக்கு. அவங்க வீட்டு சன்னல்கிட்ட போய் நின்னு பூனையைப் பாப்பேன். இன்னொரு வீட்டில சிக்கா எண்டு ஒரு நாய் இருக்கு. சிக்காவோட அம்மா எங்கிட்ட பேசிக்கொண்டே இருப்பாங்க. சில நேரம் என்னோட சைக்கிளை ஓட்டுவேன். வீட்டுக்குப் பக்கத்தில ஒரு நீச்சல் குளம், டென்னிஸ் விளாடுற இடம் எல்லாம் இருக்கு. அப்புறம் கடற்கரையும் இருக்கு. எனக்கு நிறைய நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. நாங்க வேற ஊருக்கு வந்திட்டோம். இங்க வரும்போது பருத்திச் செடியப் பாத்தேன். அப்பதான் செடியில பஞ்சு இருக்கதே பாத்தேன். நா ஒரு பஞ்சைப் பறிச்சிட்டேன். அப்பா அதைக் கொஞ்சம் முறுக்கினாங்க. நீளமா நூல் வந்திச்சு. வீட்டுக்கிட்ட ஒரு வாய்க்கா இருக்கா, அதில குஞ்சு மீனெல்லாம் இருக்கு. அதால போனா எங்க நூல் நிலையம் வரும். அங்க போயி நிறைய புத்தகம் எல்லாம் எடுத்திட்டு வருவேன்.

0 Comments:

Post a Comment

<< Home