மழலைச் சொல்

Wednesday, January 17, 2007

நா ஏன் கத்துறேன் தெரியுமா?

சில நேரம் நா வெளியில போயி ஊஊஊ... எண்டும், ஆஆஆ... எண்டும் பலமாக் கத்துவேன். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நா ஏன் அப்படிக் கத்துறேன் எண்டே புரியலை. அப்பா சொன்னாங்களாம், "அவருக்குள்ள இருக்க எதையோ வெளியில விடுறார், விடட்டும்," எண்டு. அம்மா சொன்னாங்களாம், "அப்படிக் கத்துறது, தம்பி பாதுகாப்பா விளையாடுறார் எண்டு சொல்லுற மாதிரி இருக்கு," எண்டு.

நேத்து ராச்சாப்பாட்டுக்குப் பிறகு நானும் அப்பாவும் வெளியில போயி குப்பையைப் போட்டிட்டு, கொஞ்ச நேரம் நடந்தோம். அப்ப நா மறுபடியும் ஊஊஊ... எண்டு கத்தினென். கத்திட்டு, "பாத்தீங்களா, எக்கோ (echo) வருது!" எண்டு சொன்னென். "ஓ! இதுக்குத்தான் இப்படிக் கத்துறீங்களா?" எண்டு அப்பா கேட்டாங்க. "ஆமா." எண்டு சொன்னென். "யாரு குட்டி இப்படிக் கத்துவா?" எண்டு அப்பா கேட்டாங்க. "யாரும் இல்ல, அந்த ச்சூ ச்சூ கதையில வருமே ஒரு ரயில் அதுதான் அப்படிக் கத்தினே போவும்," எண்டு சொன்னென்.

அப்புறமா எக்கோவுக்குத் தமிழ்ல எதிரொலியெண்டு சொன்னாங்க. பந்தை சுவத்தில அடிச்சா திரும்பி வருற மாதிரிதான் சத்தமும் திரும்பி வருமாம், அதான் எதிரொலி எண்டு சொன்னாங்க.

2 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

ஹை! ஜாலித் தம்பி!
பார்த்து ரொம்ப நாளாச்சே!

இன்னிக்கு எதிரொலி என்ற வார்த்தையைக் கத்துகிட்டாய் போல!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

9:16 AM  
Blogger மழலை said...

@பார்த்து ரொம்ப நாளாச்சே!@
ஏனெண்டா நா பெரியண்ணாவாகிட்டேன்:))
சிபி அண்ணா உக்ங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் வாழ்த்து! நன்றி.

9:10 AM  

Post a Comment

<< Home