மின்னி மின்னி விண்மீனே
அப்பா: குட்டி, நட்சத்திரம்னா என்ன?
நா: ஸ்டார்
அப்பா: நட்சத்திரம் என்ன செய்யும்?
நா: மின்னும்.
அப்பா: உங்களுக்கு நட்சத்திரமா இருக்கது விருப்பமா?
நா:இல்ல.
அப்பா: ஏன் குட்டி?
நா: ஏன்னா எனக்கு (நா) மின்னுறது விருப்பம் இல்ல.
அம்மா, "ஒரு நட்சத்திரப் படம் கீறுறீங்களா?" எண்டு கேட்டாங்க. நா கீறுனென். "இது finger painting அம்மா" எண்டு சொல்லிட்டு விரலால பெயிண்டை எடுத்துப் பூசினென்.

நா: கோடு
மின்னி மின்னி எண்டு ஒரு பாட்டை அப்பா சொல்லித் தந்தாங்க. அந்தப் பாட்ட இங்கிலீஷ்ல இப்படிப் பாடுவாங்க. தமிழில இப்படி,
மின்னி மின்னி விண்மீனே
உன்னைக் கண்டு வியந்தேனே
உலகின் மேலே உயர்வானில்
வைரம் போலே மின்னுகிறாய்
மின்னி மின்னி விண்மீனே
உன்னைக் கண்டு வியந்தேனே.
நா பாடுறது கேக்குதா?
11 Comments:
நம்ம சிஸ்டம்ல ஸ்பீக்கர் இல்லை, இன்னொரு நாள் கேட்பேன்.
படம் நல்ல கீறி இருக்கிறாய்.
பாட்டும் நல்லா இருக்கு!
பரஞ்சோதி அண்ணாகிட்ட சொல்றேன்!
(ஆமா உனக்கு ஏன் மின்னுறது விருப்பம் இல்லை, நீ மின்னுவதால் நாங்கள் எல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம் தெரியுமா?)
@ஆமா உனக்கு ஏன் மின்னுறது விருப்பம் இல்லை,@
நா மின்னுறது எண்டா என் மேலயிருந்து வெளிச்சம் பளிச் பளிச் எண்டு அடிக்கும் எண்டு நினக்கிறென். அதான் :))
//நா மின்னுறது எண்டா என் மேலயிருந்து வெளிச்சம் பளிச் பளிச் எண்டு அடிக்கும் எண்டு நினக்கிறென்//
:)
அப்படியெல்லாம் அடிக்காது தம்பி.
@அப்படியெல்லாம் அடிக்காது தம்பி.@
விண்மீனெண்டா மின்னத்தானெ வேணும்? :))
தம்பீ, பாட்டெல்லாம் போட்டு அசத்திபுட்டீகள். தம்பீ பயலுக்கு ஒரு கேள்வி இருக்கு... நமக்கு ஒளி கொடுக்கிற சூரியன் ஒரு நட்சத்திரமா இல்லையா? ஆமாவ இருந்தா அது ஏன் மின்னுவதில்லை?
அம்மா, அப்பா யார்கிட்ட வேணாலும் கேட்டு தெரிஞ்சுகிட்டு எங்க கிட்டயும் வந்து சொல்லுடோய்... ;-))
@நமக்கு ஒளி கொடுக்கிற சூரியன் ஒரு நட்சத்திரமா இல்லையா? ஆமாவ இருந்தா அது ஏன் மின்னுவதில்லை?@
நேசி அண்ணா, அது கிட்டக்க இருக்க நட்சத்திரம்!
ஹும், சரியா சொல்லிட்டீயே இந்த பிடி ஒரு முத்தம்... ;-)
மழலை தம்பி..
பாட்டும் படமும் நல்லா இருக்கு.
சிபி அண்ணாவுக்கும் நேசி அண்ணாவுக்கும் அழகாய் பதில் சொல்லி இருக்கிறாய் ;)
நல்ல முயற்சி..
நம்ம மொழி பெயர்ப்பையும் கொஞ்சம் பாருங்க
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு குட்டி பையா!
நல்ல சாமர்த்தியமா பாடுறாயே.
தொடர்ந்து இன்னும் நெறைய பாடினு வா.
Post a Comment
<< Home