மழலைச் சொல்

Monday, July 17, 2006

முட்டிக்குள்ள ஒரு பாப்பா

நாங்க நோர்வேக்குப் போனம். அங்க ஒரு சிலை இருந்திச்சு. இப்படித்தான் முட்டிக்குள்ள பாப்பாக்கள் எல்லாம் இருப்பாங்களாம். முட்டி எண்டா வயிறு. எங்க அம்மாட முட்டிக்குள்ளயும் ஒரு பாப்பா இருக்காங்க. தங்கச்சிப் பாப்பா வரப் போறாங்கன்னு சொன்னாங்க. தங்கச்சி இல்லாட்டி தம்பி. எனக்குத் தங்கச்சிப் பாப்பா விருப்பம். இப்பவெல்லாம் நா அம்மா, அப்பா, நா படம் கீறுறப்ப சின்னதா தங்கச்சிப் பாப்பாவையும் கீறுறன். தங்கச்சிப் பாப்பா வந்துட்டா நம்ம வீட்ல நாலு பேர் எண்டு நேத்து சொன்னென். நா தங்கச்சிப் பாப்பாவை ஸ்றோலர்ல வச்சித் தள்ளிக்கொண்டு போவென். அப்பா நேத்து ஒரு குட்டித் தலவாணியைக் கொடுத்து இதான் தங்கச்சிப் பாப்பா எண்டு சொன்னாங்க. நா தூக்கமாட்டென்னு சொன்னென். ஏனெண்டா பாப்பாவோட எச்சி ஒட்டிக்கும். ஆனா தங்கச்சிப் பாப்பாவோட விளாடுவென்.

4 Comments:

Blogger ரவி said...

வித்தியாசமான படம்...கொடுத்ததுக்கு நன்றி...

வேர்டு வெரிபிகேஷனை நீக்குங்க - அதில் பலருக்கு தொல்லை...

4:32 AM  
Blogger மழலை said...

அந்தச் சிலை இருக்க இடம் Frogner Park, Oslo, Norway.

//வேர்டு வெரிபிகேஷனை நீக்குங்க - அதில் பலருக்கு தொல்லை...//
இதைப் பலரும் சொல்லியிருந்தும் இண்டக்கிதான் செய்தேன், நன்றி.

4:54 AM  
Blogger பிரதீப் said...

படமும் சரி, உங்க மழலையும் சரி - ரொம்ப நல்லா இருக்கு

5:33 AM  
Blogger மழலை said...

//படமும் சரி, உங்க மழலையும் சரி - ரொம்ப நல்லா இருக்கு //
நன்றி

8:32 AM  

Post a Comment

<< Home