மழலைச் சொல்

Sunday, August 27, 2006

காந்தம்

என்னோட தாமஸ் ச்சூச்சூ ரயில்ல காந்தம் இருக்கு. அது பெட்டியை எல்லாம் வரிசை வரிசையா ஒட்டும். அண்டைக்கு பெரியப்பாவும் பெரியம்மாவும் எனக்கு ஒரு சாமான் அனுப்பினாங்க. அது ரெண்டு சுருக்குப்பை நிறைய காந்தம். அது எல்லாம் பள பளன்னு சின்னக் கல்லு மாதிரி இருக்கும். அந்தக் காந்தக் கட்டியை எல்லாம் சேத்தா கார், கப்பல், ரயில், வாத்து எல்லாம் செய்யலாம். சோஃபா இடுக்குல ஒரு காந்தம் விழுந்திட்டா எல்லா காந்தங்களையும் சங்கிலி மாதிரி செஞ்சு அதைத் தூக்கலாம். ஒரு நாள் அந்தக் காந்தத்தை தொலைக்காட்சிப் பெட்டி மேல வச்சேன். திடீர்னு திரை ஊதா (நாவல்) மாதிரி மாறிடுச்சு. அப்புறம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திட்டு மறுபடியும் போட்டப்புறம் தான் சரியா வந்துச்சு. காந்தத்தை கணினிகிட்டயும் வைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.

1 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

ம்ம்.. இப்பவே அறிவியல் ஆராய்ச்சியா?

ஆமா! மின்னணு பொருட்கள் பக்கத்துல காந்தத்தை வைத்தால் அது போல்தான் நடக்கும். இந்த காந்தம் தொலைக் காட்சியின் மின் காந்த அலைகளில் ஏற்படுத்தும் பாதிப்புதான் அது.

5:59 PM  

Post a Comment

<< Home