நீங்க எதிர்பார்க்கிற பதில்

"குட்டி, வடிவம் இல்லாதது எது தெரியுமா?"ன்னு கேட்டாங்க.
வடிவம்னாலே வட்டம், சதுரம், முக்கோணம் இப்படித்தானெ புத்தகத்தில போட்டிருக்கும்? வடிவம் இல்லாததுன்னா? யோசிச்சுட்டு சொன்னேன்,
"மனுஷங்க".
அப்பா சிரிச்சாங்க. எப்படியாச்சும் காத்துங்கிற பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டுப்பிடனும்னு நெனச்சாங்களோ என்னவோ, அப்பா அடுத்து கேட்டாங்க,
"சரி, பார்க்க முடியாதது எது?" (எதை?)
நா சொன்னேன்,
"இருட்டு."
"சரியான விடைதான்"னுஅப்பா சிரிச்சிட்டு நுரைக்குள்ள காத்து இருக்கும்னு மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
3 Comments:
பார்க்க முடியாதது..இருட்டு சரி.
இருட்டுங்குறது வெளிச்சம் இல்லாமைன்னு அப்பா சொல்லிக் குடுத்தாரா? அப்பா கிட்ட அதுக்கு விளக்கம் கேள். உனக்கு நெறைய தெரிய வரும்.
ha ha..vadivam illadhadu manushangala...
//எப்படியாச்சும் காத்துங்கிற பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டுப்பிடனும்னு நெனச்சாங்களோ என்னவோ, அப்பா அடுத்து கேட்டாங்க,
//
எப்படியாச்சும் காத்துங்கற பதிலை சொல்லக் கூடாதுன்னு முடிவோடதான் இருந்திருக்கீங்க போல!
:)
Post a Comment
<< Home