மழலைச் சொல்

Wednesday, August 16, 2006

என் கேள்விக்கு என்ன பதில்? -2

நா நிறைய கேள்வி கேப்பெந்தான. அண்டக்கிக் கேட்ட கேள்வியெல்லாம் ஒண்டாவது பாகத்தில இருக்கு. இதெல்லாம் ரெண்டாவது பாகம். இன்னம் நிறைய பாகங்கள் வரும். நல்லா பதில் சொல்லுற ஆக்களுக்கு எண்ட சொக்காவில (chocolate) கொஞ்சம் தருவென். பதில் சொல்லலையெண்டாலும் பிரச்சனை இல்ல :))

1. பழம் சாப்பிடும்போது ஏ விதையச் சாப்பிடக்கூடாது?
2. கத்தியால வெட்டும்போது ஏ வெட்டுப்படுது?
3. சாப்பிடும்போது எப்பிடி நசியிது?
4. ஏன் அம்மாக்கள்லம் லிப்ஸ்டிக் போடுறாங்க?
5. விதை எப்படி மரமா வளருது?
6. காட்டுல மரம் விழுந்தா ஏ இன்னொரு மரமும் விழுகுது?
7. இலங்கையில ஏ பிரச்சனை நடக்குது?

6 Comments:

Blogger மழலை said...

(பெற்றோர் குறிப்பு - குடும்பமும், நண்பரும் அடிக்கடி இலங்கையைப் பற்றிக் கதைக்கிறபடியால் இவருக்கு 7ம் கேள்வி வந்திருக்கிறது. அதக்கு மட்டும் பதில் சொல்ல ஏலலை!)

3:59 AM  
Blogger Unknown said...

மழலை நா ஒன்னோட எல்லா பதிவையும் படிச்சாலும் இன்னைக்குத்தான் பின்னூட்டம் எழுதறேன். இதை படிகும் போது எதோ ஒன்னு மனசில வந்து ஒட்டிக்கொண்டு பின்னூட்டம் இடவே முடிவதில்லை. ஒருவேளை ரொம்ப ரசிச்சு படிச்சா பின்னூட்டம் போடாமல் விடுகிற என்னோட பழக்கத்தால் இருக்கலாம் :)

4:09 AM  
Blogger நாமக்கல் சிபி said...

1. விதை ஜீரணம்(செரிமானம்) ஆகாது என்பதால்

2. கத்தி கூர்மையாக இருப்பதால்.

3. சாப்பிடும்போது பற்களால் உணவை மெல்லுகிறோம். அதனால் உணவுப் பொருள் நசிகிறது.

4. எல்லா அம்மாக்களுமா லிப்ஸ்டிக் போடுகிறார்கள்?

5.இதற்கு நேசியண்ணா பதில் சொல்லி ஒரு சொக்கால் பெற்றுக் கொள்வார்.

6.நேசியண்ணாவிற்கு இதோடு இரண்டு சொக்கால்கள்.

7. பெரிய கேள்வி கேட்டு என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் தம்பி!

5:24 AM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

தம்பீ, சிபியண்ணா எனக்கு ரெண்டு சாக்லேட்டுகளுக்கு இடம் வழங்கி இருக்கிறார்... முயன்று பார்க்கிறேன்

//3. சாப்பிடும்போது பற்களால் உணவை மெல்லுகிறோம். அதனால் உணவுப் பொருள் நசிகிறது.//

இதோட இதனையும் சேர்த்துகோட... நாம உணவை மென்னு முழுங்கின பிறகு வயித்தை அடைந்த உணவு, வயித்துகுள்ளே சுரக்கும் சில சுரப்புகளையும் கொண்டும், நாம மூச்சு வாங்கிற அழுத்தமும் சேர்ந்து இரைப்பை மீண்டும் மீண்டும் உண்ட உணவை நல்ல நசிச்சு வைக்குது...

//4. எல்லா அம்மாக்களுமா லிப்ஸ்டிக் போடுகிறார்கள்?//

சில அம்மாக்கள் எல்லோரும் போடுறாங்களேன்னு தானும் போட்டுக்குவாங்களோடா, தம்பீ... எனக்கும் தெரியலை...

5. விதை எப்படி மரமா வளருது - விதையை எப்பாவது உடைத்து பார்த்திருக்கீயாட தம்பி, இல்லென்ன உடைச்சுப் பாரு, அதற்குள்ள ஒரு மரமா வளர்வதற்கு தேவையான அத்தனை விசயங்களையும் "சூல்"(?) அப்படிங்கிற முடிச்சு மாதிரி ஒரு பைக்குள்ள வச்சு , இயற்கை அந்த விதைக்குள்ள தாய் மரத்தின் மூலமா வச்சுடுது... அந்த விதையை திரும்ப நாம மண்ணுக்குள்ள போட்டு வைக்கும் பொழுது, அதுக்கு தேவையான நீரும், வெப்பமும் கிடைக்குபொழுது வெடிச்சி முளைவிட ஆரம்பிச்சுடுது...

6. இது நல்ல கேள்வியா இருக்கே... நான் பார்த்த அளவிற்கு காட்டுக்குள்ளே, நல்ல பெரிய மரமா இருந்த அது கீழே விழும் பொழுது அதோட வேகம், கணம் அத விட சின்ன மரத்தின் மேலே சாயும் பொழுது, அந்த சின்ன மரமும் சேர்ந்து விழுந்துடுது. ஆனா, இந்த மாதிரி காட்டுக்குள்ள விழுகிறதுல ஒரு நல்ல விசயம் நடக்குது. அந்த விழுந்த இடைவெளியில நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கிறதால புதுச நிறைய குட்டிச் செடிங்க முளைக்குது...

7. ஏன் சண்டை நடக்குதா... அத கண்டுபிடிக்கத்தான் சண்டை போட்டுக்கிறாங்க... அதெல்லாம் உனக்கும் எதுக்குட இப்ப நீ பாட்டுக்கு கேள்வி கேட்டு கிட்டே இரு...

7:54 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//நா நிறைய கேள்வி கேப்பெந்தான.//

இதைப் பார்த்துதான் எல்லாரும் பயந்துட்டாங்கண்ணு நினைக்கிறேன்.

10:27 AM  
Blogger மழலை said...

நன்றி மகேந்திரன் அண்ணா!
சிபி அண்ணா, உங்க பதிலுக்கு நன்றி. உங்களுக்கு நிச்சியம் சொக்கா தருவென்.
நேசியண்ணா, @விதையை எப்பாவது உடைத்து பார்த்திருக்கீயாட தம்பி,@
சிலது உடைக்கலாம், சிலது முடியாது. கெண்டலோப் உடைச்சுப் பாத்தென். ஆனா ப்பீச் உடைக்கவே முடியல. இண்டக்கி ஒரு ப்பீச் கொட்டைய முளைக்கப் போடலாமா எண்டு அம்மா கேட்டாங்க.

@விழுந்த இடைவெளியில நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கிறதால புதுச நிறைய குட்டிச் செடிங்க முளைக்குது...@
இதை எனக்கு ஆரும் சொல்லலை! நன்றி அண்ணா! நானும் அப்பாவும் கையத் தூக்கிக்கொள்ளுவம். என் கைதா பெரியமரம். அப்பா கை சின்னமரம். பெரிய மரம் சாஞ்சு சின்னமரத்துல விழும். சின்னமரமும் விழுந்துடும். அதா அண்டக்கி நா விளாண்ட விளாட்டு. அப்படித்தா ஒரு காட்டு விடியோல விழுந்திச்சி.

@இதைப் பார்த்துதான் எல்லாரும் பயந்துட்டாங்கண்ணு நினைக்கிறேன்.@
பயப்பட்டா சொக்கா கிடையாதெல்லோ :))

11:13 AM  

Post a Comment

<< Home