மழலைச் சொல்

Sunday, August 20, 2006

தண்ணி விளாட்டு

அப்பாவும் நானும் ஒரு விளாட்டு விளாடுவோம். அது பேரு தண்ணி விளாட்டு. அது எப்படின்னா, அப்பா சொல்லுற எல்லா வார்த்தைகளையும் நா திரும்பவும் சொல்லனும். ஆனா அப்பா 'தண்ணி' அப்படின்னு சொன்னா மட்டும் சொல்லிறக் கூடாது. சொல்லிட்டேன்னா அப்பா 'தம்பி நல்லா மாட்டிக்கொண்டார்'ன்னு சொல்லிக்கிட்டே என்னைக் கிச்சு கிச்சு பண்ணிடுவாங்க. நா கவனமா இருந்து 'தண்ணி'ன்னு சொல்லிடாம 'No'ன்னு சொல்லிட்டேன்னா 'தப்பிச்சாருய்யா'ன்னு சொல்லுவாங்க. எனக்குத் தப்பிக்கிறது விருப்பம். அப்புறம் மறுபடியும் அப்பா நிறைய வேற வேற வார்த்தையெல்லாம் சொல்லுவாங்க. நா திருப்பிச் சொல்லுவென், ஆனா கவனமா 'தண்ணி'யே சொல்லாம தப்பிச்சுருவென்.

2 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல கவனமான பிள்ளையா இருக்கீங்க மழலை.

நல்லதொரு விளையாட்டை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க. நன்றிப்பா.

அன்புடன்,
மதி அத்தை/சித்தி/அன்ரி

9:59 PM  
Blogger நாமக்கல் சிபி said...

நல்ல விளையாட்டு!

(தலைப்பைப் பார்த்துட்டு நான் என்னவோ ஏதோன்னு நினைச்சி ஒடியாந்தேன்)

6:06 PM  

Post a Comment

<< Home