மழலைச் சொல்

Saturday, August 12, 2006

உங்களுக்கு ஒரு ஆச்சரியம் வச்சிருக்கென்

நா வெளியில போகும்போது குச்சி, கல், இலை எல்லாத்தையும் பொறுக்குவென். அப்பாவொட போனா அம்மாவுக்கும், அம்மாவொட போனா அப்பாவுக்கும் கொண்டு வந்து "உங்களுக்கு ஒரு ஆச்சரியம் வச்சிருக்கென்" எண்டு சொல்லிட்டு அதைக் குடுப்பென். அதப் பாத்து அவங்க ஆச்சரியப்படுவாங்க. நன்றி சொல்லிட்டு வாங்கி வச்சுக் கொள்வாங்க. இண்டக்கி ல்யூலோட வெளியில விளாண்டென். அப்பாவும், ல்யூலொட அப்பாவும் பேசிக்கொண்டு நிண்டாங்க. நாங்க வண்டி ஓட்டினம், தண்ணியப் புல்லுல கொட்டி விளாண்டொம். பிறகு வீட்டுக்குள்ளாற போம்போது அம்மாவுக்கு ஆச்சரியம் ஒண்டு எடுத்தென். அது என்னெண்டா, தண்ணி போட்டு குழப்பின சேறு. அம்மாட்ட கொண்டு குடுத்தனா, அம்மா ரொம்ப ஆச்சரியப் பட்டாங்க.

7 Comments:

Blogger பத்மா அர்விந்த் said...

இதெல்லாம் எடுத்தப்புறம் கையை நல்ல கழுவிடனும் தெரியுமா? பூ பறிச்சு எடுத்து வருவீங்களா என் மகன் செய்யறா மாதிரி.

1:22 PM  
Blogger மழலை said...

@இதெல்லாம் எடுத்தப்புறம் கையை நல்ல கழுவிடனும் தெரியுமா?@
ஆமா தேன் துளி அக்கா, நல்லா சோப்பு போட்டுக் கழுவிருவென்.

@பூ பறிச்சு எடுத்து வருவீங்களா என் மகன் செய்யறா மாதிரி.@
ஆமா, அதுவும் எடுத்துட்டு வருவென்.

1:33 PM  
Blogger நாமக்கல் சிபி said...

குட்டி நட்சத்திரமான ஜாலித்தம்பிக்கு என்னோட வாழ்த்துக்கள்.

9:20 PM  
Blogger மழலை said...

நன்றி சிபி அண்ணா!

9:44 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

நீங்கதான் நட்சத்திரமா.. இப்பத்தானே பார்க்கிறேன்.
நிறைய எழுதுங்க என்ன. :O)

அப்புறம், வெளிலே வெயில்லே விளையாடறப்ப தலைக்குத் தொப்பி போட்டுக்கங்க. இல்லன்னா தலைவலி வரப்பாக்கும்.

உங்களை விடக் கொஞ்சம் பெரிய ஒரு அக்கா பதிவு போட்டுட்டிருந்தாங்க. இப்ப அவங்க பதிவொன்றையும் காணல்ல. நீங்க எந்த இடத்துலே இருக்கிறீங்க என்று தெரிஞ்சு கொள்ளலாமா?

9:55 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

அவசரப்படக் கூடாது என்டுறது இதுக்குத்தான். :O))
சுட்டி வேலை செய்திருக்காது. சரியான சுட்டி இதோ

9:58 PM  
Blogger மழலை said...

மழை அக்கா,
எனக்கு அஞ்சலி அக்கா தெரியிம், திரு எண்டு ஒரு அண்ணா சொன்னாங்க!
வாழ்த்த்க்கு நன்றி!

10:04 PM  

Post a Comment

<< Home