அம்மா என்னை நூல் நிலையத்துக்கு கூட்டின்னுப் போனாங்க. அண்டைக்குத்தான் கோடைகால நிகழ்ச்சிகளின் கடைசி நாள். கோடைகாலத்தில நானும் அம்மாவும் சேர்ந்து 56 புத்தகங்கள் வாசித்தோம். எனக்கு ஒரு சான்றிதழும் கொடுத்தாங்க. அன்றைக்கு நூல் நிலையத்துக்கு டெய்சியும் வந்தாங்க. டெய்சி ஒரு பன்றி. அதுக்கு 12 வயசாம். கறுப்பா இருந்துச்சி. சின்ன பாப்பாக்களையெல்லாம் வச்சிருப்பாங்களே தள்ளு வண்டி, அதுல படுத்து தூங்கிட்டே இருந்திச்சி. அந்த பன்றிக்குட்டியேட அப்பா பேரு திரு மைனர் (படத்தில இருக்காங்களே அவங்கதான்). அம்மா பேரு திருமதி மைனர். ராத்திரியில அதோட அம்மா அப்பாவோடத்தான் தூங்குமாம். அதுக்கு புத்தகங்கள் வாசிக்க விருப்பமாம். அதோட அப்பா தினமும் நிறைய புத்தகங்கள் படிச்சுக் காட்டுவாங்களாம். டெய்சிக்கு விருப்பமான புத்தகங்களையும் கொண்டு வந்து வச்சிருந்தாங்க. டெய்சி மாதிரியே நாங்களும் படிக்கணுமாம். நா போறப்ப அது எந்த வித்தையும் காட்டல, எதுவும் பேசல. சும்மா தூங்கிட்டே இருந்திச்சு. என்னை மாதிரி நிறைய சின்ன பிளைங்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அதுக்கு நா முத்தம் கொடுத்தேன், கட்டியும் புடிச்சேன்.
4 Comments:
//கோடைகாலத்தில நானும் அம்மாவும் சேர்ந்து 56 புத்தகங்கள் வாசித்தோம். //
56 புத்தகம் படிச்சீங்களா மழலை ! உண்மையாகவே நல்ல விசயம்,
நல்ல பழக்கம்!
//நா போறப்ப அது எந்த வித்தையும் காட்டல, எதுவும் பேசல. சும்மா தூங்கிட்டே இருந்திச்சு//
டெய்சி நைட்டு கன்னு முழிச்சு படிச்சிருக்கும். அதான் நீ போகும் போது சமத்தா தூங்கிட்டது!அடுத்த தடவை பாரூ கண்டிப்பா வித்தை காட்டும்,
//அதுக்கு நா முத்தம் கொடுத்தேன், கட்டியும் புடிச்சேன்//
அப்படியா குட்டி!
இந்தா மழலை!! சரவணா மாமாவோட அன்பு முத்தங்கள் உனக்கும் டெய்சிக்கும், மறந்திடாம கொடுத்துடு!சரியா?
அன்புடன்...
சரவணன்.
//கோடைகாலத்தில நானும் அம்மாவும் சேர்ந்து 56 புத்தகங்கள் வாசித்தோம். //
good job!
புத்தகமெல்லாம் படிக்கிறயே...ரொம்ப நல்ல பழக்கம். நெறைய படிச்சு நல்லபடியா முன்னுக்கு வரனும். சரியா?
புத்தகம் படிக்கிறது ரொம்ப நல்ல பழக்கம்!
Post a Comment
<< Home