மழலைச் சொல்

Saturday, August 19, 2006

கடற்கரைக்குப் போனோம்

நாங்க கடற்கரைக்குப் போனோம். நா எப்போதும் என்னோட கொட்டுவண்டியைக் கொண்டு போவென். போயி அதில மண்ணை அள்ளி அள்ளி ஓட்டிக்கொண்டுபோய் கொட்டுவேன். ஏன்னா கட்டுமான வேலைக்கெல்லாம் மண்ணு வேணுந்தான? எங்கெ கட்டுமான வேலை நடக்குது எண்டு அப்பா கேட்டாங்க. பெங்களூரில எண்டு சொன்னென்.

ஒரு லாடநண்டு (horse-shoe crab) பாத்தென். அது செத்துப் போனது. கடிக்காது. தொட்டுப் பாத்தென். சில நேரம் அசையாம தரையில மல்லாந்து கிடக்கும். எடுத்து தண்ணியில போட்டா ஓடிப் போயிடும். அப்பா திருப்பிப் போட்டாங்க. அது நகரவே இல்ல.


நா மணல்ல கோடு போட்டென். அப்பா 'அ' போட்டாங்க. என்னிட்ட 'ம' எழுதுறீங்களா எண்டு கேட்டாங்க. எழுதினென்.

ஆனா அப்புறம் சொன்னதையெல்லாம் எழுதாம ஓடிப் போயிட்டென். நா என்னோட கொட்டு வண்டியோட விளையாண்டென். அப்புறமா அம்மாவுக்கு ஒரு ஆச்சரியம் கொண்டு வந்தேன். அது ஒரு நண்டுக்கால்.

6 Comments:

Blogger - உடுக்கை முனியாண்டி said...

பெங்களூருன்னா உங்களுக்கு இஷ்டமா!! யாரு இருக்காங்க அங்க.

அப்புறம் உங்களோட கொட்டு வண்டி படம் எங்க.

6:34 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

மழலை, உங்களை, உங்கள் பதிவைப் பற்றி இப்போ தான் தெரிந்து வந்து பார்த்தேன். நல்லா இருக்கு எல்லாம்.

செத்த நண்டானாலும் நானெல்லாம் தொடக்கூட மாட்டேன். நீங்க தைரியமா இருப்பீங்க போலிருக்கு. நல்லா இருங்க.

7:39 AM  
Blogger aaradhana said...

நன்றாக உள்ளது..உங்கள் பதிவு..

9:10 AM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

//ஏன்னா கட்டுமான வேலைக்கெல்லாம் மண்ணு வேணுந்தான? //

ஆமா கண்ணு!

//ஆனா அப்புறம் சொன்னதையெல்லாம் எழுதாம ஓடிப் போயிட்டென்//

அப்படியெல்லாம் செய்யக் கூடாது சரியா! அப்பா, அம்மா சொல்லுறதக் கேட்டு அதே மாதிரி பண்ணு என்ன செல்லம்!

ஆமா! நேத்து நான் உனக்கும் உனது பன்றி நண்பருக்கும் முத்தங்கள் கொடுத்தேனே கிடைச்சதா!
சமத்தா இருக்கனும் கண்ணு! சரியா!


அன்புடன்...
சரவணன்.

10:45 AM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

தம்பீ, சூப்பர்ட. வீட்டுக்குப் பக்கத்திலயே கடற்கரை சொல்ல வேண்டும்... நல்லா அனுபவி ;-))

11:07 AM  
Blogger நாமக்கல் சிபி said...

நேசி அண்ணாவே சொல்லிட்டார்ல. என்ஜாய்!

6:09 PM  

Post a Comment

<< Home