1:20க்குத்தான் போவணும்

அப்பா மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாங்க. நாங்க எல்லாரும் சாப்பிடும்போது, "அப்பா நீங்க எப்ப போவீங்க?"ன்னு கேட்டென்.
"1:20க்கு"ன்னு அப்பா சொன்னாங்க.
நா மைக்ரோவேவை திரும்பிப் பாத்தென். ஏன்னா அதுலதான மணி தெரியும்.
அப்பா சொன்னாங்க, "அதில 1 போட்டு ரெண்டு புள்ளி வச்சு 2க்கு அப்புறம் 0 வருமே அப்ப."
நா 1:20 வந்திடுச்சான்னு பாத்துக்கொண்டே இருந்தென். நாங்க சாப்பிட்டு முடிச்சிட்டு முன்னுக்குப் போயிட்டம். அப்புறமா நா வந்து மணியப் பாத்துப்போட்டு அப்பாட்ட சொன்னென்,
"இப்பதான் 1 போட்டு ரெண்டு ரெண்டு போட்டிருக்கு, இன்னும் 1:20 வரல."
அப்பா சொன்னாங்க "இல்ல குட்டி அப்படின்னா 1:20 ஏற்கனவே வந்துட்டுப் போயிடுச்சு."
நா சொன்னென், "இல்லப்பா நீங்க போக்கூடாது, 1:20 வந்த பிறகுதா போவணும்."
12 Comments:
//நா சொன்னென், "இல்லப்பா நீங்க போக்கூடாது, 1:20 வந்த பிறகுதா போவணும்."
//
சரிதான், 1/2 நாள் அப்பா லீவு போட வேண்டியதுதான்.
:)
@சரிதான், 1/2 நாள் அப்பா லீவு போட வேண்டியதுதான்.@
இல்லை சிபி அண்ணா, அப்பா இப்பிடி இப்பிடி அமுக்கினாங்களா 1:20 வந்துச்சு அப்புறம் போயிற்றாங்க.
அறிவாளிப் பிள்ளை.. அறிவாளி அப்பா..
சரி, அதென்ன புதுசா புகை விடுது தவளை?
ஆகா இப்ப அடம்பிடிக்கவும் ஆரம்பிச்சிடியா :))
//அப்பா இப்பிடி இப்பிடி அமுக்கினாங்களா 1:20 வந்துச்சு //
எப்படின்னு கேட்டு கத்து வெச்சிக்குங்க!
இன்னொரு நாள் பயன்படும்.
12.30 மணிக்கு டி.வி பார்க்கலாமில்ல.
ஆஹா! சிபியாரையே கவுத்திட்டீங்களே, மழலை!
இது எதிர்க்கட்சி சதிதானே!!
தம்பீ, மணி பாக்குறதுக்கு கடிகாரமே இல்லைன்ன அப்பா வேலைக்கே போக வேண்டியதில்லை உனக்கு ஒரே குஷியா இருக்குமில்லே ;-)))
@அதென்ன புதுசா புகை விடுது தவளை?@
அச்சச்சோ படகு அக்கா, அது தவளயில்ல, ரயில்...புகைவிடுது :)
@ஆகா இப்ப அடம்பிடிக்கவும் ஆரம்பிச்சிடியா :))@
சந்தோஷ் அண்ணா, எனக்கு அப்பா வீட்லெயெ இருக்கணும் அதான்.
@12.30 மணிக்கு டி.வி பார்க்கலாமில்ல. @
ஆனா இன்னிக்கி அப்பா வந்தவுடன நா பறவை விடியோ பாப்பென். அப்பா ஓமெண்டு சொல்லிருக்காங்க.
@ஆஹா! சிபியாரையே கவுத்திட்டீங்களே, மழலை!
இது எதிர்க்கட்சி சதிதானே!! @
அச்சோ, சிபி அண்ணா வேல் அண்ணா என்னமொ சொல்லுறாங்க, எனக்கு விளங்கயில்ல!
@மணி பாக்குறதுக்கு கடிகாரமே இல்லைன்ன அப்பா வேலைக்கே போக வேண்டியதில்லை@
இல்லை நேசி அண்ணா, குருவி கத்தினாலெ அப்பா வேலைக்கிப் போயிடுவாங்கள்! :)
வேல் அண்ணா!
குழந்தையைக் குழப்பாதீர்!
அப்பா வீட்டிலையே இருந்தா தவளை ரயில் எல்லாம் எங்கிருந்து வரும் தம்பி? :)
//குருவி கத்தினாலெ அப்பா வேலைக்கிப் //
குருவியை என்ன பண்ணலாம்னு நேசி அண்ணா சொல்வாரு :)
மழலை,
உங்க பதிவெல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கே! பேஷ் பேஷ். பிரமாதம்.
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
துளசி அக்கா, நன்றி!
Post a Comment
<< Home