மழலைச் சொல்

Wednesday, August 09, 2006

அம்புலி அம்புலி பாட்டு

ராத்திரி சன்னலால பாத்தமா. பெருசா அம்புலி இருந்துச்சு. அம்மா ஒரு பாட்டு சொல்லித் தந்தாங்க.

அம்புலி அம்புலி, எங்க போற?
ஓல வெட்ட.
ஏ ஓல?
பெட்டி உளைக்க.
ஏ பெட்டி?
காசு போட.
ஏ காசு?
மாடு வாங்க.
ஏ மாடு?
சாணி போட.
ஏ சாணி?
வீடு மொழுக.
ஏ வீடு?
சின்னப்புள்ள இருந்து விளையாட!


5 Comments:

Blogger மழலை said...

அர்த்தம் தெரியலையெண்டா அவங்களுக்காண்டி அர்த்தம் :)
ஓல = ஓலை
பெட்டி உளைக்க = பெட்டி செய்ய.
ஏ = ஏன்

6:54 AM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

அட! நல்ல குட்டிப் பாட்டா இருக்கே..

நான் கேள்விப்பட்டிருக்கிறது இப்பிடி:
அம்புலிமாமா
அழகழ சொக்கா
எங்கே போறாய்?
காட்டே(காட்டுக்கு) போறேன்
காடு ஏன்?
கம்பு வெட்ட
கம்பு ஏன்?
மாடு சாய்க்க
மாடு ஏன்?
சாணி போட
சாணி ஏன்?
வீடு மெழுக
வீடு ஏன்?
பிள்ளை வளர
பிள்ளை ஏன்?
பள்ளிக்குப் போக
பள்ளி ஏன்?
பாடம் படிக்க
பாடம் ஏன்?
பட்டம் வாங்க
பட்டம் ஏன்?
பெருமைக்காக
பெருமை ஏன்?
பெருமைக்காக...


கேட்கணும் என்று நினைச்சேன்.. சாப்பாட்டு மேசையிலே வைச்சிருந்த செடியிலே வேற பூ பூத்ததா?

4:03 PM  
Blogger மழலை said...

ஷ்ரேயா அக்கா, உங்க பாட்டும் நல்லா இருக்கு.
@சாப்பாட்டு மேசையிலே வைச்சிருந்த செடியிலே வேற பூ பூத்ததா?@
4 பூத்தது. அப்புறமா பூக்கலை!
நன்றி அக்கா!

3:37 AM  
Blogger பரஞ்சோதி said...

அன்பு மழலை, அருமையான பாடல், எளிமையாக இருக்குது.

சின்ன வயசிலே விளையாடும் போது இப்படி பல பாடல்களை ஒருவருக்கு ஒருவர் பாடி விளையாடுவோம்.

இப்பாடலை இன்றே என் மகள் சக்திக்கு சொல்லி கொடுக்கிறேன்.

3:57 AM  
Blogger மழலை said...

நன்றி பரஞ்சோதி அண்ணா. நீங்க ஏன் இப்ப கதை எழுதிறது இல்ல?

11:54 AM  

Post a Comment

<< Home