எனக்குக் கோவமா வருது
அம்மாட்ட எனக்குத் தொலைக்காட்சி போடச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தென். அம்மா, "உங்க படம் வர்றப்ப போடுறென்" அப்படின்னு சொல்லிக்கொண்டே இருந்தாங்க. இப்ப வருமா, இப்ப வருமான்னு நா கேட்டுக்கொண்டே இருந்தென். அப்போ அம்மா சொன்னாங்க, "12 மணிக்குத்தா வரும்" எண்டு. நா சொன்னென், "அம்மா, எனக்குக் கோவமா வருது". அம்மா கேட்டாங்க, "கோவம் வர்றதுன்னா என்ன குட்டி?" நா சொன்னென், "எனக்கு இதயம் வேகமா அடிக்குது."
28 Comments:
:)) நல்ல பிள்ளை இல்ல இந்த வயசுல கோவம் எல்லாம் படக்கூடாது அம்மா நம்ம நல்லதுக்குத்தானே சொல்வாங்க. டிவி பாக்குற நேரத்துல வெளியில போயி விளையாடுனா உடம்பு நல்லா இருக்குமாம் பெரியவங்க சொல்லி இருக்காங்க.
மழலை,
உங்க எழுத்துக்கு நான் தொடர் வாசகியாக்கும்:))
சந்தோஷ் அண்ணா, நா நல்லா விளாடுறந்தான். ஆனா எனக்கு அரை மணித்தியாலந்தான் தொலைக்காட்சி நேரமாம். இது காணுமா? :)
நன்றி செல்வநாயகி அக்கா :)
மழலைத் தம்பி,
சிபியண்ணனோட சேர்ந்து கெட்ட பையனாப் போய்ட்டீயள்.. அதான் கோபம் எல்லாம் வருது..
சிரிச்ச பிள்ளையா இருக்கணும்.. சரியா?
What a curiously smart and cute little kid you are Mazhalai. Hmm.
உங்களுக்கு கோவம்தான் வந்திச்சு என்று அம்மா ஒத்துக்கிட்டாங்களா?
கோவம் என்ன நிறம்னு நினைக்கிறீங்க?(இப்பிடித்தான் தொடர்பேயில்லாம கேள்வி கேப்பேன்.. லூசுன்னு நினைச்சிராதிங்க :O)
அங்கே Sitting Ducks என்று ஒரு கார்ட்டூன் போடுவாங்களா தொ.கா.ல? ஒரு வாத்தும் ஒரு முதலையும் நண்பர்கள். அவங்களைப் பத்தின கதை. எனக்கு அது ரொம்பப் பிடிக்கும்.
@சிரிச்ச பிள்ளையா இருக்கணும்.. சரியா?@
சரி படகு அக்கா. ஆமா சிபி அண்ணாக்கு ரொம்ப கோவமா வருமா?
Anonymous, நன்றி:)
@கோவம் என்ன நிறம்னு நினைக்கிறீங்க?@
அப்பா என்கிட்ட கேட்டாங்க, நான் சொன்னேன் "சிவப்பு"!
@Sitting Ducks@
அது இங்க வராதே ஷ்ரேயா அக்கா!
சிபி அண்ணனுக்குக் கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம போய்டும்.. அண்ணனோட ப்ரொபைல் பார்க்கலையா?
//சிரிச்ச பிள்ளையா இருக்கணும்.. //
சிபி அண்ணனும் சிரிச்ச பிள்ளைதான். ஆனால் இளிச்ச வாயனெண்டு சொல்கிறார்களே படகு அக்கா!
//ஆமா சிபி அண்ணாக்கு ரொம்ப கோவமா வருமா?
//
எனக்கு சிறு குழந்தைகளிடம் எல்லாம் கோபம் எல்லாம் வராது ஜாலித்தம்பி.
அப்படியே கோபம் வந்தாலும் அவ்வ்வ்வ்வ் எண்டு அழுதுடுவென்.
கோபம் வரும்போதெல்லாம் ஜாலித்தம்பியோட பதிவுகளைப் படிச்சா கோபம் எல்லாம் போயே போச்சி! போயிந்தே! இட்ஸ் கான்!
(அப்பப்போ படகு அக்காவிடம் நல்லா சண்டை போடுவேன்)
:)
// "எனக்கு இதயம் வேகமா அடிக்குது."//
கொபம் உடம்புக்கு நல்லதல்ல ஜாலித்தம்பி!
எப்பவும் ஜாலியா சிரிக்க வேணும். அதுதான் நல்லது.
நன்மனம், நன்றி :)
படகு அக்கா, இப்ப விளங்கிறமாதிரி இருக்கு:)
சிபி அண்ணா, @அப்படியே கோபம் வந்தாலும் அவ்வ்வ்வ்வ் எண்டு அழுதுடுவென். @
அச்சோ, அழயெல்லாம் கூடாது, சின்னப்பிள்ளங்கதா அழும். நாம பெரிய பிள்ளங்கதான அழக்குடாது :))
சிபி அண்ணா, எனக்கொரு கேள்வி இருக்கு, ஏ நீங்க ஒரு கமெண்டுக்குப்பதிலா நாலு கமெண்டு போடுறிங்க?
//நீங்க ஒரு கமெண்டுக்குப்பதிலா நாலு கமெண்டு போடுறிங்க? //
:)))))
சிபி அண்ணனுக்கு இப்போ கோபம் வரப் போகுது தம்பி.. இப்பிடி எல்லாம் கேட்கறீங்க :)
//சிபி அண்ணா, எனக்கொரு கேள்வி இருக்கு, ஏ நீங்க ஒரு கமெண்டுக்குப்பதிலா நாலு கமெண்டு போடுறிங்க?//
தம்பீ, நல்ல கேள்வி கேட்டியல் போங்க... சிபியண்ணா என்ன பதில் சொல்றார் பார்க்கலாமா ;-))
//அச்சோ, அழயெல்லாம் கூடாது, சின்னப்பிள்ளங்கதா அழும். நாம பெரிய பிள்ளங்கதான அழக்குடாது :)) //
யாருடா தம்பீ அப்பிடி உனக்கு சொன்னது, யாரு வேண்டுமானாலும் அழலாம், தப்பில்லை. அழுகிறதும், உன்னோட கோபப் படுறமாதிரியே ஒரு எமொஷன் தானே... என்ன கோபம் வந்தால் கொஞ்ச நேரம் அமைதிய இருந்து யோசிக்கணும், அவ்ளொதான்...
//சிபி அண்ணனும் சிரிச்ச பிள்ளைதான். ஆனால் இளிச்ச வாயனெண்டு சொல்கிறார்களே..//
இது சிபிக்கு தம்பீ, என்னை சொல்றதுன்னா நேர சொல்லிடணும் ஆமாம் :-))
மழழை குட்டி மிக அழகாக இருக்கிறது உன் தமிழ் !!! இவ்வளவு சின்ன பையனுக்கு என்னம்மா இவ்வளவு கோவம் உனக்கு ??:))
//அச்சோ, அழயெல்லாம் கூடாது//
:)
//நாம பெரிய பிள்ளங்கதான அழக்குடாது//
ஜாலித்தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும்.
(ஆமா! படகு அக்கா சொன்னதுல என்ன விளங்கிச்சு?)
//ஏ நீங்க ஒரு கமெண்டுக்குப்பதிலா நாலு கமெண்டு போடுறிங்க?
//
நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லித்தரணும் இல்லையா!
//இப்பிடித்தான் தொடர்பேயில்லாம கேள்வி கேப்பேன்.. லூசுன்னு நினைச்சிராதிங்க//
முதலிலேயே தெரியும் ஷ்ரேயா அக்கா!
அதனால இப்பவெல்லாம் ஒண்ணும் புதுசா நினைக்கமாட்டோம்.
//ஆனா எனக்கு அரை மணித்தியாலந்தான் தொலைக்காட்சி நேரமாம். இது காணுமா? :)//
இதுவே அதிகம். நிறைய நேரம் பாத்தா கண்ணு கெட்டு போயிடும் அப்புறம் படகு அக்கா கண்ணுமாதிரி நாலு கண்ணாயிடும்.
//நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லித்தரணும் இல்லையா! //
சிபி பாவம குழந்தை விட்டுடு இந்த வயசுலயே கலாய்க்க ஆரம்பிக்காதே.
சந்தோஷ் அண்ணா!
நான் ஏதோ பின்னூட்டக் கயமைத்தனத்தைப் பத்தி சொல்லித் தரப்போறேனெண்டு நினைத்தீர்களோ!
அதெல்லாம் ஒன்றும் இல்லை!
//சிபி பாவம குழந்தை விட்டுடு இந்த வயசுலயே கலாய்க்க ஆரம்பிக்காதே//
ஏங்க இப்படி புதுசு புதுசா கத்துத் தர்றீங்க? அடுத்தது கலாய்த்தல்னா என்னன்னு கேட்டு ஜாலித்தம்பி ஒரு பதிவு போடுவார் பாருங்க!
//நான் ஏதோ பின்னூட்டக் கயமைத்தனத்தைப் பத்தி சொல்லித் தரப்போறேனெண்டு நினைத்தீர்களோ!//
ஆகா இந்த தம்பி ஜாலி தம்பி மாதிரி தெரியலையே :)) நிறைய விவகாரமான விஷயங்களை பேசுதே.
//நான் ஏதோ பின்னூட்டக் கயமைத்தனத்தைப் பத்தி சொல்லித் தரப்போறேனெண்டு நினைத்தீர்களோ!//
அச்சோ சந்தோஷ் அண்ணா, இதச்சொன்னது நானில்ல, சிபி அண்ணா:)
எல்லாரும் என்னைக் குளப்பாதேங்க:)
//முதலிலேயே தெரியும் ஷ்ரேயா அக்கா!
அதனால இப்பவெல்லாம் ஒண்ணும் புதுசா நினைக்கமாட்டோம்.//
:OP
(என்ன சிபி!!! இதுக்கெல்லாம் போய் டிஸ்கி கொடுத்துக் கொண்டு.. "take it easy" policy brother. :O)
//"take it easy" policy brother//
மழை அக்கா! மிக்க நன்றி!
மழலை, அரை மணித்தியாலமாவது கிடைக்குதேன்னு சந்தோஷமா இருக்கனும். சரியா? நெறைய பேருக்கு அது கூட இல்லையாம். டீ.விய விட புத்தகம் நெறைய படி. சரியா?
Post a Comment
<< Home