மழலைச் சொல்

Tuesday, August 08, 2006

என்கிட்ட ஒரு வண்டு இருக்கு

அம்மா அப்பா நா எல்லாரும் நடக்கப் போனம். நா ஒரு குச்சிய கீழ கிடந்து எடுத்தென். குச்சிதான் என்னோட புல் வெட்ற எந்திரம். வழி ஓரத்தில இருந்த புல் மேல ட்ர்ர்ர்ருன்னு ஓட்டிக்கொண்டு போவென். கொஞ்சம் நேரத்தால அப்பா, "தம்பி, இங்க ஓடி வாங்களே ஒண்டு காட்டுறென்" எண்டு கூப்பிட்டாங்க. என்னவெண்டு போய்ப் பாத்தா அது ஒரு வண்டு. நா தொடலை. பயமா இருந்திச்சு. அது கடிக்குமா எண்டு கேட்டென். இல்லை அது செத்துப் போச்சு எண்டு கையில எடுத்துக் காமிச்சாங்க. அம்மா அதை ஒரு குப்பியில போட்டு வைக்கலாமெண்டு சொன்னாங்க. அந்த வண்டுக்கு ஆறு கால்கள். ரெண்டு பெரிய்ய கண்கள். 4 செட்டைகள். நாங்க அதைப் படம் எடுத்தோம். நா அதைத் தொட்டென். பிரட்டினனா, ஒரு காலில கொஞ்சம் உடஞ்சு போயிடுச்சு. இந்த வண்டை ஒரு பெட்டியில வச்சிருக்கிறன்.
இது என்ன வண்டு தெரியுமா? இந்த வண்டுக்குப் பேரு சிகாடாவாம் (Cicada). அப்படின்னா சுவர்க்கோழி
எண்டு அர்த்தமாம். இதுதான் ராத்திரியில க்ரிங்ங்ங்ங்ங் எண்டு சத்தம் போடுமாம். சத்தம் வருது, பாப்பமே எண்டு கிட்டக்க போனா கண்டு புடிக்கவே முடியாதாம். இதெல்லா எனக்கு எப்படித் தெரியும் எண்டு பாக்கிறீங்களோ? இயற்கை நேசி அண்ணாதான் சொன்னாங்க!

6 Comments:

Blogger இயற்கை நேசி|Oruni said...

இந்த வண்டு பார்பதற்கு சிகாடா (Cicada) போல இருக்கிறது தம்பீப்பயலே...

அது அப்படி சிகாடாவ இருந்த தமிழ்லெ வந்து சுவர்க்கோழின்னு சொல்லுவாங்க (சரியான்னு அப்பா அம்மாகிட்ட கேளு), இதுதான் ராத்திரியில 'கிரிங்ங்ங்ங்ங்ங்ங்' சத்தம் போடுமில்ல அவருதான் இவரு... அப்படின்னு நினைக்கிறேன்...

நல்ல படம் எடுத்திருக்கிய... நல்லாருக்கு!

3:16 PM  
Blogger மழலை said...

This comment has been removed by a blog administrator.

5:46 PM  
Blogger மழலை said...

இயற்கை நேசி அண்ணா, நீங்க சொல்லுறது சரிதான் போலக்கிடக்கு. ஏனெண்டா நா வச்சிருக்கிற வண்டு இதேபோலத்தான்,
http://plaza.ufl.edu/petec/Exam%20II/cicada%20002%20copy.jpg
அம்மாப்பா சுவர்க்கோழி எண்டு சொல்லுவாங்க. இண்டக்கிதான் பாக்கிறாங்களாம். உங்கட விளக்கத்துக்கு நன்றி அண்ணா:)

5:48 PM  
Blogger நாமக்கல் சிபி said...

ம். இப்பவே உயிரியல் ஆராய்ச்சியா!

தெகாவையும் சேர்த்துக்கோங்க!

7:00 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

தம்பிப் பயலே,

பார்த்திய நான் சொன்னது சரியாப் போச்சு. இந்த வண்டுப்பசங்கள அவளவு ஈசிய கண்டுபிடிக்க முடியாது. எங்கிருந்து சத்தம் வருது சரி போய் பார்போம் அப்படின்னு கிட்ட சத்தம் வார திசை நோக்கி நடந்து போனீன்ன டக்குன்னு சத்தத்த நிப்பாட்டிட்டு அப்படியே மரப் பட்டையோட ஒட்டிட்டு உட்காந்திருவாரு.

ரொம்ப ஆபூர்வம் நீ பார்க்கிறது, அடுத்த முறை முயற்சி செஞ்சு பாறேன்...

7:29 PM  
Blogger மழலை said...

இயற்கை நேசி அண்ணா, நீங்க சொன்னதுகூடவே இன்னொரு படமும் போட்டுவிட்டென்.
@தெகாவையும் சேர்த்துக்கோங்க!@
சிபி அண்ணா, எல்லாரயும் சேத்துக்குவோமெண்டு சொல்லுறன் :)

6:36 AM  

Post a Comment

<< Home