என் கேள்விக்கு என்ன பதில்?
நா நேத்து ராத்திரி அம்மாட்ட சொன்னேன், "அம்மா எனக்கு நான்கு கேள்விகள் இருக்கு."
அம்மா என்ன எண்டு கேட்டாங்க.
ஒண்டாவது கேள்வி: மரம் எப்படி சாப்பிடுது?
ரெண்டாவது கேள்வி: பூமி ஏன் சுத்துது?
மூண்டாவது கேள்வி: லைட்டைப் போட்டா ஏன் கண்ணு கூசுது?
நான்காவது கேள்வி: வயித்துக்குள்ள என்ன வேலையெல்லாம் நடக்குது?
அப்புறம் மொதல்ல கேட்ட இன்னொரு கேள்வி:
பூச்சியெல்லாம் செத்துப் போகும்போது ஏன் கக்கா போடுது?
உங்களுக்கு பதில் தெரியுமா?
20 Comments:
இதுக்கு பதில், உங்களுக்கும் மழலை பிறந்து பதில் தெரியாமல் நீங்களும் பேந்தப் பேந்த முழிக்கும்போது தெரியவரும்.
இந்தக் கேள்விக்கெல்லாம் நம்ம தெகா சகா பதில் வெச்சிருப்பார்.
கண் போட்டு முளிக்கும் கார்த்திக்ரமஸ் அண்ணா, கண்ணு கேள்விக்காட்டும் பதில் சொல்லலாம். சும்மா முளிக்காண்டாம். நன்றி :)
// நம்ம தெகா சகா //
அவர் ஆனகிட்ட மாட்டிக்கொண்டு ஓடினத அப்பா படிச்சுப்போட்டு சிரிச்சாங்களாம்.
மழலை,
//அவர் ஆனகிட்ட மாட்டிக்கொண்டு ஓடினத அப்பா படிச்சுப்போட்டு சிரிச்சாங்களாம்..//
:-))) அதுவும் அப்பிடியா, நான் ஓடின ஓட்டம் எனக்குத்தான் தெரியுது இன்னும் கனவில மூச்சு வாங்குது ;-)))
தெக்கிக்காட்டான் அண்ணா, நீங்க தப்பிச்சதுல சந்தோஷம்.
ஆம, நீங்க பதில் சொல்லுவிங்க எண்டு சிபி அண்ணா சொன்னாரே? சொல்லுவிங்கதானெ?
//ஆம, நீங்க பதில் சொல்லுவிங்க எண்டு சிபி அண்ணா சொன்னாரே? சொல்லுவிங்கதானெ?//
என்னங்க என்ன எலோரும் சேர்ந்து Dr. Do Little ஆக்கிபுட்டீங்க. எனக்கு கேள்வி # 2 விடை தெரியுமே அது வந்து "பூமி சுத்தலைன்னா, தொபுக்கடீர்னு கீழே விழுந்துடும்." ஹி...ஹி...ஹி...
மரம் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு என்று சொல்லக் கூடிய கரியமிலவாய்வை இரவுப் பொழுதுகளில் உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு தன்னிடம் உள்ள பச்சையம் என்ற பொருளின் மூலம் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்து உட்கொள்கிறது.
செல்ஃப் குக்கிங்க்! தெகா ஏதாவது தப்பிருந்தா சொல்லுங்க!
குழந்தையை மிஸ்கைட் பண்ணக் கூடாது இல்லையா!
குழந்தைகளா, அண்ணன் சிபி சொன்னமாதிரியேத்தான் மரங்களுக்கு சாப்பாடு கிடைக்கிது. அந்த மாதிரி நடத்திற செயலுக்கு பேரு ஒளிச்சேர்க்கைன்னு பேரு. கிடைக்கிற அந்த பொருட்களையும் கொண்டு பிறகு மண்ணில் கிடைக்கிற மத்த சத்துப் பொருட்களையும் கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான விசயங்களை பொற்றுக் கொள்கின்றன.
அப்புறம் ஒண்ணு தெரியுமா... நாமும் இந்த மரங்களும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுகெல்லாம்?
எப்படின்னு கேட்டீங்கன்ன... நாம சுவாசிச்சு வெளிவிடற அந்த அசுத்தக் காத்தை இந்த மரங்கள் உட்கொண்டு, நம்ம சுவாசிக்கிற நல்ல காத்தை ரெடி பண்ணி கொடுக்குதுங்க... அப்ப அந்த மரங்கள் நமக்கு ரொப்ப அவசியமில்லையா... குட் நண்பர்களும் கூடத் தானே
//பூமி ஏன் சுத்துது?//
உங்க கேள்விக்கு கீழே ஒரு பதில் இருக்கு அத படிச்சுட்டு புரியலன்ன சொல்லுங்க மொழி பெயர்த்து சொல்லுவோம்... ஒகேவா?
Question: Why does the earth spin? What makes it spin?
Mark -- second grade
Answer: Earth spins because (presumably) the cloud from which it condensed had some rotation. As it condensed, it spun up because something called the angular momentum is conserved. If you pour some water in to a sink, you would have noticed that it spins up as it approaches the outlet, this is another example of spinning up. If a body is spinning then it must keep on doing so forever, unless some force acts on it. That is why the Earth keeps on spinning - you don't need a force to keep it going.
Jasjeet
Mazhali
I dont have tamil fonts, sorry.
Trees have Phloem tubes, which helps to pass food. This is just like our digestive system with out complications.
2.Our pupil in the eye is made of muscle just like a camera lens. It is adjusted to darkness and shrinks to small aperture. Suddenly when light comes, it opens up in a hurry to accomodate light resulting in tingling feeling nerves.
Your dad can explain very well what is happenign in the stomach:)
When a bug dies there is a nerve or ganglion stimulation that makes thaier smooth muscles to contract or segments to contract and that makes them to poop.
//குழந்தைகளா,//
தெகா! இங்கே ஒரே ஒரு குழந்தைதான் உண்டு!
(அல்லது என்னையும் குழந்தையாக்கிட்டீங்களா? :-)
)
தெக்கிக்காட்டான் அண்ணா, தேன் துளி அக்கா, உங்கட பதிலுக்கெல்லாம் நன்றி! ஆனா விளங்கிக்கொள்ள நா இன்னம் கொஞ்சம் பெரிய்ய பையனா வரோணுமெண்டு நினக்கிறன்:)
//(அல்லது என்னையும் குழந்தையாக்கிட்டீங்களா? :-)
) //
சிபி அண்ணா, இது கொஞ்சம் அதிகமாத் தெரியல்லே? :)
பகடிக்கு அண்ணா! நீங்க மனசில குழந்தைதான் போலக்கிடக்கு!
//நீங்க மனசில குழந்தைதான் போலக்கிடக்கு!
//
ஆமா ஜாலித்தம்பி! குழந்தைகளோடு சேர்ந்து வெளையாடும்போது நாமும் குழந்தையாயிடணும்! அப்போதான் அவுகள் சொல்லித் தருவார்கள். நாம் கத்துக் கொள்வோம்!
:)
மழலைக்கு என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்களும், பரிசாய் இரண்டு படங்களும்.
http://en.wikipedia.org/wiki/Eye
இங்க போயி படிச்சி பாரு கண்ணைப்பத்தி நிறைய போட்டு இருக்காங்க.
நன்றி சந்தோஷ் அண்ணா! அம்மாப்பாட்ட படிச்சுக்காட்டச் சொல்லுறன்.
சிபி அண்ணா உங்களுக்கும் வாழ்த்து!
//(குழந்தை மிஸ்கைட் பண்ணப்படக்கூடாது என்றபடியால் சொல்கிறேன். தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நாமக்கல் சிபி).
//
தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது நிலா மிஸ்!
நானும் இத்தனை நாள் இரவுப் பொழுதில் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக திருத்தியமைக்கு நன்றி!
(குழந்தைகளை மட்டுமில்லே, பெரியவங்களையும் சரியா கைட் பண்ணவேண்டிய பொறுப்பு மிஸ்ஸுக்கு இருக்கிறது அல்லவா?)
Post a Comment
<< Home