நிறைய மை பூசிட்டா...
அண்டக்கி சாந்தன் மாமாவும், அத்தை, கீர்த்தனா பாப்பா, இன்னும் இரண்டு அத்தைகள் எல்லாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா. எனக்கு ஒரு வண்ணப்பெட்டி, படங்கள் எல்லாம் கொண்டு வந்தாங்க. நேத்து நானும் அப்பாவும் அதிலயிருந்த அக்கா படத்துக்கெல்லாம் வண்ணம் தீட்டீனம். அப்போ நா எல்லா மையையும் கலந்து கலந்து நல்லா அந்தப் படங்களில தலையில இருந்து காலு வரைக்கும் பூசினன். அப்பா அந்தப் பக்கம் இருந்து இன்னொரு அக்கா படத்துக்கு மை பூசிக்கொண்டிருந்தாங்க. அப்போ பாத்தா என்னோட அக்காப்படத்தில அக்காவே தெரியல. மை மறைச்சிடிச்சு. எப்படி திரும்பவும் வெள்ளையாக்கிறது எண்டு பாத்தன். பக்கத்தில ஒரு பெரிய கிண்ணத்துல தூரிகையெல்லாம் கழுவுறதுக்காண்டி நிறைய தண்ணி வச்சிருந்தம். அதுல எல்லா அக்காக்களையும் ஒண்ணு ஓண்ணாப் போட்டு கழுவினன். அப்போ அம்மா சிரிச்சுட்டு கேட்டாங்க, "குட்டி என்ன செய்யுறிங்க?" எண்டு. நா, "அம்மா, எல்லா அக்காக்களும் swimming poolல குளிக்கிறாங்க" எண்டு சொல்லிப்போட்டு சிரி சிரி எண்டு சிரிச்சன். எல்லாரும் சிரிச்சாங்க. பிறகு அப்பாவும் அவங்க வண்ணம் பூசின படத்தைத் தண்ணியில போட்டுட்டாங்க. அதான் இந்தப்படம்.
எனக்கு நண்பர்கள் நாள் வாழ்த்துச் சொன்ன எல்லா நண்பர்களுக்கும், படம் போட்ட சிபி அண்ணாக்கும் நன்றி! உங்கள வாழ்த்துகிறன் :)
6 Comments:
//உங்கள வாழ்த்துகிறன் //
:)
உனக்கும் என் நன்றி ஜாலித்தம்பி!
(ஆமாம்! படகு அக்காவோட படம் எப்படி கிடைத்தது?)
சிபி அண்ணா, என்ன இப்பிடி தாத்தாவப்போல இருக்கியள் புதுப்படத்திலை? :)
@(ஆமாம்! படகு அக்காவோட படம் எப்படி கிடைத்தது?)@
படகு அக்காதான் எனக்கு அனுப்பினவர் :)) (சும்மா சொல்லுறன்)
வண்ணம் தீட்டி தண்ணிலெ போட்டு எடுத்த படம் நல்லாயிருக்கே, புதுச கண்டுபிடிச்சு எல்லாரையும் முயச்சிக்க வைக்கிறீய, தம்பி... :-)
ஆமாம் சிபி, நான் தான் அனுப்பினேன்...
மழலைத் தம்பி, "படகு அக்கா" எண்டதாலே, தண்ணியிலே போட்டாச்சா? :)
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
படம் அருமை
நேசி அண்ணா,
நீங்களும் கீறிப்பாருங்க.
@"படகு அக்கா" எண்டதாலே, தண்ணியிலே போட்டாச்சா? :)@
ஆமா, அப்படித்தா :)
//நேசி அண்ணா,
நீங்களும் கீறிப்பாருங்க
//
ஆமாம்! தெகா அண்ணா!
கீறும்! கீறிப்பாரும்!
Post a Comment
<< Home