கோயிலுக்குப் போனென்
நேத்து அப்பா ஒரு இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போனாங்க. அது ஒரு கோயில். நிறைய படியால ஏறிப் போனம். ஷூவெல்லாம் கழட்டிட்டு உள்ள போனம். அங்க நிறைய சிலையெல்லாம் இருந்துச்சு.
ஒரு இடத்துல,
"அதுக்குப் பக்கத்துல நா போணும்" இன்னு அப்பாட்ட சிலையக் காட்டிச் சொன்னென்.
"அந்த அறைக்குள்ள போகக்கூடாது"ன்னு அப்பா சொன்னாங்க.
"ஏன்?"னு கேட்டென்.
"அங்க எழுதிப் போட்டிருக்கு"ன்னு அப்பா சொன்னாங்க.
கொஞ்ச நேரத்தால வேட்டி கட்டிட்டு ஒரு மாமா அந்த அறைக்குள்ள போனாங்க.
"அப்பறம் அவுங்க மட்டும் போறாங்க?" அப்படின்னு அப்பாட்ட கேட்டென்.
அப்பா சொன்னாங்க,
"அவங்க இங்க வேலை பாக்கறவங்க, அவங்க மட்டுந்தான் போவலாம். கடைகள்ல சில இடங்கள்ல எழுதியிருக்குமில்ல "இதுக்குள்ள கடை ஆக்கள் மட்டுந்தான் வரணும்"னு, அதுமாதிரிதான், அந்த அறைக்குள்ளயும் இங்க வேலை பாக்கறவங்க மட்டுந்தான் போவணுமாம்."
அப்புறம் ஒரு இடத்துல ஒரு பெரிய பெட்டி மாதிரி இருந்துச்சா,
"இது என்னப்பா?"ன்னு கேட்டென்.
"அது பேரு உண்டியல்"னு அப்பா சொன்னாங்க.
"அதுல என்ன எழுதியிருக்கு?"ன்னு கேட்டென்.
"காசை இதுக்குள்ள போடுங்கன்னு எழுதியிருக்காங்க" அப்படின்னு அப்பா சொன்னாங்க.
உடனே நா கேட்டென்,
"அதுக்குள்ள காசு போட்டா என்ன வரும்?"
அப்பா சிரிச்சாங்க.
5 Comments:
உள்குத்து ;-))))
@உள்குத்து ;-))))@
அப்படியெண்டால் என்னயெண்டு விளங்கப் படுத்துங்க. நல்லாயிருக்கு எண்டு அர்த்தமா? இல்லையெண்டா? நன்றி.
அனானி சின்ன குழந்தைகளையாவது விட்டு வையுங்கப்பா!
அவர்களுக்கும் உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாம் சொல்லிகிட்டு!
நல்லா இருக்கு மழலை!
கால்ல புண்ணு சரி ஆயிடுச்சா?
//கால்ல புண்ணு சரி ஆயிடுச்சா?//
ஓ அப்பயே. ஆனா அதுக்குப்பிறகும் ஒருக்கா விழுந்தென். அதுவும் ஆறிப்போயிற்றுது. நன்றி.
//ஓ அப்பயே// :)
//ஆனா அதுக்குப்பிறகும் ஒருக்கா விழுந்தென்.// :(
//அதுவும் ஆறிப்போயிற்றுது// :)
பார்த்து இருக்கக் கூடாதோ!
Post a Comment
<< Home