மழலைச் சொல்

Tuesday, July 18, 2006

வானவில் மீன்


ஒரு கடல்ல வானவில் மீன் அப்படின்னு ஒரு மீன் இருந்துச்சாம். அதுகூட யாருமே விளாடலயாம். ஏன் நம்மகூட யாரும் விளாடவே வரலைன்னு அந்த மீனுக்குக் கஷ்டமா இருந்துச்சாம். "ஏன் எங்கூட யாரும் விளாட வரலை"ன்னு நண்டுகிட்ட போயி கேட்டுச்சாம். நண்டு சொன்னுச்சாம், "நீங்க போயி நட்சத்திர மீனுகிட்ட கேளுங்க" அப்படின்னு. நட்சத்திர மீனுகிட்ட கேட்டப்ப, "நீங்க போயி அதோ அந்த ஆக்டபஸ்கிட்ட கேளுங்க"ன்னு சொன்னுச்சாம். ஆக்டபஸ்கிட்ட கேட்டப்ப, அது சொன்னுச்சாம், "வானவில் மீனே வானவில் மீனே, நீங்க யார் கூடயும் உங்க விளாட்டு சாமான்களையெல்லாம் பகிர்ந்துக்குறதே இல்ல, அதான் யாருக்கும் உங்ககூட விளாட விருப்பமில்ல. நீங்க பகிர்ந்துக்கிட்டா எல்லாரும் உங்ககூட விளாடுவாங்க"ன்னு சொன்னுச்சாம். உடனே வானவில் மீன் தன்கிட்ட இருந்த நிறங்களையெல்லாம் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்துச்சாம். அப்புறமா எல்லோரும் சந்தோஷமா ஒன்னா விளாண்டாங்களாம்.

இந்தக் கதையை நேத்து கதை நேரத்துல திருமதி வெபர் சொன்னாங்க. அப்புறமா ஒரு மீன் படத்தைத் தந்து வண்ணம் பூசச் சொன்னாங்க.

இப்ப நா பெரிய்ய பையனா வந்துட்டேன்னு சொல்லி எனக்கு ஒரு நூல்நிலைய அட்டை குடுத்தாங்க. அது மஞ்சள் நிறம். நா எத்தனை புத்தகம் வேணுமின்னாலும் எடுக்கலாம். நா நிறைய்ய்ய புத்தகம் வச்சிருக்கேன். அம்மா எனக்குப் படிச்சுப் படிச்சுக் காட்டுவாங்க. எனக்குப் புத்தகம் வாசிக்கிறது விருப்பம்.

3 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

கதையோட நீதி என்னவெண்டு புரிஞ்சிகிட்டீங்களா ஜாலித்தம்பி?

(ஜாலி என்பது நான் மழலைக்கு வைத்துள்ள பெயர்)

8:28 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

// நா நிறைய்ய்ய புத்தகம் வச்சிருக்கேன். அம்மா எனக்குப் படிச்சுப் படிச்சுக் காட்டுவாங்க. எனக்குப் புத்தகம் வாசிக்கிறது விருப்பம். //

அப்படி படிச்சுகிட்டே இருந்தாக்க, நீயும் ஒரு நா புத்தக எழுதலாம் தானே, வாசிச்கிட்டே இரு... நல்ல இருக்கு நீ எழுதுறது, நான் அடிக்கடி வந்து நீ எழுதும் போதல்லாம் வந்து படிக்கிறேன்...

11:58 AM  
Blogger ALIF AHAMED said...

அம்மா எனக்குப் படிச்சுப் படிச்சுக் காட்டுவாங்க. எனக்குப் புத்தகம் வாசிக்கிறது விருப்பம்.

/./

வாசிக்கிறத கேட்க விருப்பமுனு சொல்லனும் என்ன..

1:07 PM  

Post a Comment

<< Home