ஏரிக்குப் போனமா...
அப்பா சிரிப்பா ஒரு விஷயம் சொன்னாங்க. அது என்னன்னா, ஒரு அப்பா இருந்தாராம். அவருக்கு ஒரு பையன் இருந்தாராம். அந்த அப்பா ஒரு நாள் அந்தப் பையனைத் திருவிழாக்குக் கூட்டிட்டுப் போனாராம். அப்ப சொன்னாராம் "டேய் திருவிழாக்குக் கூட்டிட்டுப் போவேன் ஆனா ஒன்னும் கேக்கக் கூடாது." ஆனா திருவிழாவுக்குப் போனத்துக்கு அப்புறம் அந்தப் பையன் விசில் கேட்டு அழுதாராம். உடனே அந்த அப்பா சொன்னாராம், "டேய் விசில் வாங்கித் தருவேன், ஆனா ஊதக்கூடாது." எனக்கு இதைக் கேட்டா சிரிப்பா வரும்.
நாங்க நேத்து ஒரு ஏரிக்குப் போனம். அது ஒரு பெரிய்ய ஏரி. அங்க குளிக்கலாம், படகில போலாம். விளையாடலாம். அப்போ நான் அப்பாகிட்ட சொன்னென், "அப்பா, ஏரிக்குக் கூட்டிட்டுப் போவென், ஆனா நீச்சல் அடிக்கக் கூடாது." அப்பா, அம்மா, அத்தை எல்லாம் சிரிச்சாங்க. ஏரியில நா ரொம்ப நேரம் குதிச்சுக் குதிச்சுக் குளிச்சென். படகில போனென்.
அப்புறமா இண்டக்கி சாப்பிடும்போது நா சொன்னென், "அப்பா, சாப்பிடுற கடைக்குக் கூட்டிட்டுப் போவென், ஆனா முழுங்கக் கூடாது."
2 Comments:
//அப்புறமா இண்டக்கி சாப்பிடும்போது நா சொன்னென், "அப்பா, சாப்பிடுற கடைக்குக் கூட்டிட்டுப் போவென், ஆனா முழுங்கக் கூடாது."//
:)
//நாங்க நேத்து ஒரு ஏரிக்குப் போனம். அது ஒரு பெரிய்ய ஏரி. அங்க குளிக்கலாம், படகில போலாம். //
நாங்களும் ஒரு ஏரிக்கு போனேம், மீன் பிடிச்சோம், மூனு மணிநேரம் நல்ல ஏரியில குதிச்சு விளையாண்டோம், அப்புறம் என் மகனுக்கு நல்ல பசி, நிறைய பேசிகிட்டே சாப்பிட்டோம்.
நல்ல இருக்கே... நிறைய எழுதுங்க, நானும் வந்து சொல்றேன்... :-)
Post a Comment
<< Home