மழலைச் சொல்

Sunday, March 26, 2006

நானும் இந்தச் செடியும் படும் பாடு

எங்க வீட்டில இருக்கிற செடிகளில இதுவும் ஒண்டு. நா சின்னப்பிள்ளையா இருக்கும் போது இதுக்கு என்ன பேரெண்டு அம்மாக்கிட்ட கேட்டேன். Peace Lilly எண்டு சொன்னாங்க. எனக்கு இதுக்கூட விளையாடப் புடிக்கும். எங்கிட்ட இருக்கிற குட்டி குட்டி கார்கள் எல்லாத்தையும் எடுத்துண்டு வந்து செடிக்குப் போட்டிருக்கிற மண்ணையெல்லாம் அள்ளிக் கீழ போட்டு அதுல ஓட்டி ஓட்டி விளாடுவென். அம்மா வந்து பாத்துட்டு இப்படியெல்லாம் செய்ய வேணா ஏனெண்டா, மண்ணுதா அதுக்குச் சாப்பாடு அந்த சாப்பாடெல்லாம் வெளிய எடுத்து போட்டுட்டா செடி வாடிரும், தெம்பால்லாம் இருக்காது, மயக்கம் போட்டு விழுந்துடும் எண்டு சொன்னாங்க. அப்போ நா காமராஜ் தாத்தா படத்திலக்கூட ஒரு அண்ணா சாப்பிடாம மயக்கம் போட்டு விழுவாங்களே அது மாதிரியா எண்டு கேட்டேன். அதுக்கு அம்மா ஆமா எண்டு சொன்னாங்க. சரி இனிமே நா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எண்டு சொன்னேன். அண்ணைக்கு ஒரு நாள் நா சின்னப் பிள்ளையா இருந்தப்போ அந்தச் செடிக்கு மேல என் காரையெல்லாம் ஓட்டி இலையெல்லாம் முறிஞ்சிப்போச்சி. அப்போ அப்பா இப்படியெல்லாம் செய்ய வேணாம் எண்டு கண்டிப்பா சொல்லிற்றாங்க. வழக்கம் போல சரி இனி நா செய்யல எண்டு சொன்னேன். இன்னொரு நாள் அம்மா செடிக்குத் தண்ணி ஊத்திட்டு குளியலறையிலேயே வச்சிட்டு வந்துட்டாங்க. அந்தப் பக்கம் நா போனப்போ செடிய எடுத்துக் கழுவு தொட்டிக்குள்ள வச்சி நிறைய சுடுதண்ணி திறந்து விட்டேன். அம்மாவுக்கு பயங்கர கோவம் வந்திருச்சி. என்னை sofaல போய் உக்காந்து நா செய்ததெல்லாம் சரியா தப்பா எண்டு யோசிக்க சொன்னாங்க. இப்பெல்லாம் அந்தச் செடி சாப்பாட்டு மேசையிலத்தான் இருக்கு.

இண்ணைக்கு காலையில நாங்கெல்லாம் காலைச் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தப்போ அம்மா ஆஆஆ பூ பூத்திருச்சு அப்படியெண்டு சொன்னாங்க. நா மேசையில ஏறிப் பாத்தேன், வெள்ளையா ஒரு குட்டிப் பூ இருந்துச்சு. அப்பாடா, ரெண்டு வருசத்துல இப்பதான் பூத்திருக்கு எண்டு அம்மா சொன்னாங்க. தொட்டுப் பாக்கலாமா எண்டு கேட்டேன். இல்ல முதல்ல கீழ இறங்குங்க எண்டு சொல்லிற்றாங்க!

4 Comments:

Anonymous Anonymous said...

அட! இனி மறக்காம செடிக்கு குடிக்கத் தண்ணியெல்லாம் குடுங்க செல்லம். அப்போதான் இன்னும் நிறைய பூ பூக்கும், சரியா?

8:07 PM  
Anonymous Anonymous said...

எங்க வீட்லயும் ஒரு செடி இருக்கு மழலை, அது பூவும் பூக்காது, காயும் காய்க்காது. நானும் காத்து காத்து பார்கிறேன், ஒண்ணும் ஆகல..கிம்ம்ம்!

8:13 PM  
Anonymous Anonymous said...

mazhalai,

neenga poo chedia nalla paakiringa polla iruku. Paratukal! Amma/appata ketu ovoru nazhum koncha thanni oda, koncha koncha poo chedi marunthum kalanthu ootunga. Appothan neriya periya periya poo ella pookum. Seriya? Ippokooda unga poo chedi agazha iruku.

10:43 PM  
Blogger Thangamani said...

அதுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற உங்க அம்மா உங்களை பழக்கலாமே! அப்புறம் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு செடிய வாங்கிகொடுத்து அதை நீங்க மட்டும் தான் பார்த்துக்கனும் அப்படீன்னும் சொல்லலாம்!

2:21 AM  

Post a Comment

<< Home