மழலைச் சொல்

Thursday, March 23, 2006

படக்கதை


அப்பா கரும்பலகையில ஒரு படம் கீறினாங்க. அதுல ஒரு சூரியனும் மலையும் இருந்துச்சு. கீழ ஒரு ஆறு கீறினாங்க. அப்பதான் நா அங்க போனென். "ஆத்துல யாரும் குளிக்காதீங்க" அப்படின்னு ஒரு அறிவிப்புப் பலகை வைக்கச் சொன்னேன். அப்பா, "இல்ல வைப்போம், ஆனா கவனமாக் குளிக்கச் சொல்வோம், ஏன்னா அது ஆழமான ஆறு"ன்னு சொல்லிட்டு, ஒரு அறிவிப்புப் பலகை வச்சாங்க. அப்புறமா அக்கரையில ஒரு காடு கீறினாங்க. அதுல ஒரு காட்டெருமை கீறச் சொன்னென். அதுவும் ஒரு மானும் புல் மேயுற மாதிரி கீறினாங்க. அப்புறம் ஒரு சாலை கீறினாங்க. "மான் குறுக்க வரும், கவனம்" அப்படின்னு அதுலயும் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கச் சொன்னென். ஆனா அப்பா, "காரே இந்தப் பக்கம் வரக்கூடாது"ன்னு வச்சிட்டாங்க. ஏன்னு கேட்டேன், அது மானுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கும், அந்தச் சாலையில நடந்து போகலாம், சைக்கிள்ல போகலாம்னு சொன்னாங்க. அப்புறமா மேகம் கீறினாங்க. நிறைய மேகம் போடச் சொன்னென். அதுலேருந்து மழை பேயச் சொன்னென். இடியும் கீறச் சொன்னென். பாத்தா மழை பேயுது, மான் அதுபாட்டுக்கு மேயுது. அப்போ நா அப்பாகிட்ட சொன்னேன், "அப்பா மழை வருதுல்ல, அதுனால மானெல்லாம் மேல பாக்குற மாதிரி கீறுங்க," அப்படின்னு. அப்பா சிரிச்சுட்டு மானும், காட்டெருமையும் மேல பாக்குற மாதிரி கீறினாங்க. கீறி முடிச்சுட்டு, அந்த மலைக்குப் பக்கத்துல ஒரு பையன் இருந்தானாம் அப்படின்னு ஒரு கதையும் சொன்னாங்க. எனக்குக் கதை ரொம்ப விருப்பம். அதுக்காண்டிதான் அம்மா எனக்கு நிறையக் கதை வாசிச்சுக் காட்டுவாங்க.

3 Comments:

Blogger Unknown said...

//"ஆத்துல யாரும் குளிக்காதீங்க" அப்படின்னு ஒரு அறிவிப்புப் பலகை வைக்கச் சொன்னேன். //

குட்டித் தங்கத்துக்கு என்னா அறிவு? :)., நிறையக் கதை கேட்டு எழுதுங்கோ... நீங்க படம் கீறுவிங்கதானே

6:33 PM  
Blogger Thangamani said...

அருமையான கதை. கதையாசிரியருக்கும், இயக்குனருக்கும் வாழ்த்துகள்!

7:22 PM  
Blogger -/பெயரிலி. said...

மழலை அண்ணே
இதெல்லாம் என்ன கதையண்ணே? சாதாரண தமிழருக்கு விளங்கிறமாதிரி குமுதம் விகடன் கதைபோடுங்க போடுங்கண்ணே. இல்லையெண்டால், உங்கட தமிழையும் விளங்காத கட்டகரிக்குள்ளே போட்டுடுவாங்கள்.

10:43 AM  

Post a Comment

<< Home