மழலைச் சொல்

Monday, February 27, 2006

கொழுக்கட்டைப் பாட்டு

அப்பா ஒரு கொழுக்கட்டைப் பாட்டு சொல்லித் தந்தாங்க-

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?

மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?

பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?


-அதான் பாட்டு.
இதான் அம்மா அவிச்ச கொழுக்கட்டை!
ஆனா இது வெந்த கொழுக்கட்டை. அதனால சாப்பிடும்போது நான் பாடுனென்:
கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ வெந்துட்டிங்க?
மழையே பெய்யல வெந்துட்டென்!

14 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

கொழுக்கட்டைப் பாட்டு நல்லா இருந்தது! அப்படியே ஒரு கொழுக்கட்டையும் கொடுத்தா சாப்பிட்டு பார்த்து நல்லா இருக்கான்னு சொல்லிடுவேன்! :)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

5:54 AM  
Blogger நாமக்கல் சிபி said...

குழந்தை, இங்க வந்து பாரு,

உனக்காக இன்னும் சில பாடல்கள்

எல்லாமே நான் சின்ன வயசுல படிச்சது!நல்லா இருந்தா திருப்பி சொல்லு என்ன!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

7:01 AM  
Blogger G.Ragavan said...

பாட்டு பிரமாதம். கொழுக்கட்டையும் பிரமாதம். எனக்கு?

7:09 AM  
Blogger நாமக்கல் சிபி said...

அட என்னங்க ராகவன்!

இருக்கறதே 9 கொழுக்கட்டைகள்தான்!

ஆளாளுக்குக் கேட்டால் குழந்தை அழப்போகுது!

இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

7:12 AM  
Blogger மழலை said...

@ஒரு கொழுக்கட்டையும் கொடுத்தா@
@எனக்கு?@

எனக்கு ஒன்னு எடுத்துட்டேன். இன்னும் 8 இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கொன்னு சிபி சகா, கோ.ராகவன் சகா. இன்னும் 6 யாரு முந்துறாங்களோ அவங்களுக்குத்தான் :-D

சிபி சகா படிச்சுட்டு பாடிட்டு சொல்றேன், ச்சரியா? நன்றி.

7:21 AM  
Blogger மழலை said...

திரு சகா, ஒங்களுக்கு இல்லாமயா, கண்டிப்பா உங்களுக்கும் ஒன்னு :-D
ஆமா ஒங்களுக்குப் பிடி கொழுக்கட்டை பிடிக்குமா மடிக் கொழுக்கட்டை பிடிக்குமா? மடிக் கொழுக்கட்டை ரொம்பக் கஷ்டம், என்னைய வச்சுக்கிட்டு செய்ய முடியாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க!

8:50 AM  
Blogger thiru said...

எனக்கும் ஒரு கொழுக்கட்டை தாங்கடா செல்லம்! கொழுக்கட்டைனா எனக்கு நல்ல விருப்பமாக்கும்...

8:50 AM  
Blogger நாமக்கல் சிபி said...

ம்ம்... நாலு கொழுக்கட்டை காலி.இன்னும் நாலுதான் இருக்கு!

குழந்தைய சாப்பிட விடுங்கப்பா!

(இதன் நகல்:http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

8:59 AM  
Blogger மழலை said...

உங்களுக்கில்லாமயா திரு சகா, கண்டிப்பா உங்களுக்கும் ஒன்னு :-D

@குழந்தைய சாப்பிட விடுங்கப்பா!@
we have to share சிபி சகா :-D

9:07 AM  
Blogger Thangamani said...

நல்ல பாட்டா இருக்கு பையா!

கொழுக்கட்டை சூப்பர்!

பாட்டுல ஏதாவது அரசியல் உள்குத்து இருக்கா?

10:53 AM  
Blogger thiru said...

எனக்கு ரெண்டு கொழுக்கட்டையும் விருப்பம் மழலை. மடிக் கொழுக்கட்டை சுவை அதிகம், அது நல்ல விருப்பம் :D

//@குழந்தைய சாப்பிட விடுங்கப்பா!@
we have to share சிபி சகா :-D//

நல்ல பழக்கம். இது பற்றி
"பகுத்துண்டு பல்லுயிர்....." னு ஒரு குறள் இருக்கு அதை உங்க அம்மாகிட்டே கேளுங்க

12:53 PM  
Blogger மழலை said...

சிபி சகா நா உங்க பாட்டெல்லாம் படிச்ச. நல்லா இருந்திச்சு. எனக்கு மழை பாட்டு முதலே தெரியும். நா மழை வருது நெல்லு "அள்ளுங்க" எண்டுதா பாடுவேன். நா இப்ப விள்ளாடுறேன் அப்புறம் வாறன்.

3:35 PM  
Blogger -/பெயரிலி. said...

/எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?/

ஹி ஹி!!
நீங்க எங்கையோ போட்டியள் அண்ணை.
உங்களை அடுத்த கிழமையின்ரை குட்டிநச்சத்திரமா தெரிவுசெய்யவேணூம்

4:31 AM  
Blogger மழலை said...

///நீங்க எங்கையோ போட்டியள் அண்ணை.///
பெயரிலி சகா நா எங்கேயும் போகல, இங்கேத்தான் இருக்கிறன். தெளிவா இருக்கிறன்.

//"பகுத்துண்டு பல்லுயிர்....." னு ஒரு குறள் இருக்கு அதை உங்க அம்மாகிட்டே கேளுங்க//

திரு சகா அம்மாக்கிட்ட கேட்டன் அப்போ அம்மா நீங்க எழுதி இருக்கிறத அப்படியே படிச்சுட்டு மீதிய அப்பாக்கிட்ட கேக்க சொல்லிற்ராங்க.

7:47 AM  

Post a Comment

<< Home