மழலைச் சொல்

Saturday, February 18, 2006

சோர்வம்

நா நேத்து ஷூ ராக்லேருந்து எல்லா ஷுவையும் கீழ தள்ளிட்டேன். அப்பா எடுத்து வைக்கச் சொன்னாங்க. என்னால எடுத்து வைக்க முடியாதேன்னு சொன்னேன். அப்பா ஏன்னு கேட்டாங்க. நான் சோர்வமா இருக்கேன்னு சொன்னேன். கொஞ்சம் சோகமா, கொஞ்சம் சோர்வா இருக்கதுதான் சோர்வம். அப்பா கண்டிப்பா எடுத்து வைக்கச் சொல்லிட்டாங்க. நான் எல்லா ஷூவையும் எடுத்து வச்சிட்டேன். அப்புறம் சோர்வமாவே இல்ல.

6 Comments:

Anonymous Anonymous said...

சோர்வம் என்கிற சொல்லை தமிழுக்கு தந்திருக்கிற பையனுக்கு நன்றி!

3:37 AM  
Blogger நாமக்கல் சிபி said...

சோகம் + சோர்வு = சோர்வம்

ஆஹா அருமையான புதிய தமிழ் வார்த்தை. இரு தம்பி! ஓடிப்போய் மருத்துவர் ஐயாவிடம் தெரிவித்து விட்டு வருகிறேன்.

(இந்த பின்னூட்டத்தின் நகல் :
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

6:08 AM  
Blogger மழலை said...

நா ஒங்கள அல்லாத்தையும் சகா அப்பிடின்னுத்தான் கூப்பிடப்போறென். ஓக்கேவா?
தேங்க்யூ அனானிமஸ் சகா.
சிபி சகா நீங்க சீக்கிரம் ஓடி வந்துருங்க, இல்லன்னா அவுங்க ஊசி போட்ருவாங்க.

9:09 AM  
Blogger thiru said...

ஆகா! தமிழ் இனி தழைக்கும் மழலைகளால்!

என் தங்கை சிறு பிள்ளையா இருக்கிறப்போ, கோழிக்கறி குழம்பு வைத்து சப்பிட்டோம். தங்கை திடீரென எனக்கு "கொப்பை" வேணும்னு அழ ஆரம்பித்தாங்க. பக்கத்தில இருந்த நான் கோழியின் எலும்பை காட்டினேன். அதை வாங்கி சந்தோசமா சாபிட்டா. எலும்பு=கொப்பை :D அது தான் நினைவில் வருது இப்போ...

//சிபி சகா நீங்க சீக்கிரம் ஓடி வந்துருங்க, இல்லன்னா அவுங்க ஊசி போட்ருவாங்க.//
அவர் ஊசி போடமாட்டார். இந்த மருத்துவர் தமிழ் வளர்ச்சிக்காக ஊக்கம் தருபவர். நாங்க தான் தமிழில் பேசுவதிலையே...

4:09 AM  
Blogger மழலை said...

நன்றி திரு சகா. எனக்கும் கோழிக் கொப்பை விருப்பம் :)

8:21 AM  
Blogger -/பெயரிலி. said...

மழலை அண்ணை
அப்பிடியெண்டால், கோவம் எண்டால், கோபமாகவும் வம்பாகவும் இருக்கிறதோ?

4:35 AM  

Post a Comment

<< Home