மழலைச் சொல்

Monday, February 20, 2006

போலீஸ் கார்

வீட்டுக்கு முன்னுக்கு ஒரு பச்சை கார் வந்து ஆண்ட் சிண்டியோட வெள்ளை காரை மோதிருச்சு. கிறீன்னு சத்தம் கேட்டுச்சு. போலீச கூப்புடுங்க போலீச கூப்புடுங்கன்னு அப்பா டெலிபோனை எடுத்து கால் பண்ணினாங்க. அப்புறம் ஆம்புலன்ஸ், போலீஸ் கார், தீ வண்டி எல்லாம் வந்துச்சு. யாருக்கும் அடி படலன்னு சொன்னாங்க. நா பாத்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் அப்பா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. அம்மா ப்ளாஷ் இல்லாம எடுங்கன்னு சொன்னாங்க. நா எடுத்தேன். இப்படி வந்துச்சு. அப்புறம் அப்பா கேமராவை அசையாம பிடிச்சுக்கிட்டாங்க, நான் அமுக்கினேன். அப்புறம் எல்லா வண்டியும் போயிருச்சு. பாத்தீங்களா போலீஸ் கார் லைட் அடிச்சுக்கிட்டு நிக்குது!

6 Comments:

Blogger Thangamani said...

போலீஸ் கார்களின் புகைப்படம் அருமையாக இருக்கிறது. பதிவும் குழந்தைகளின் தொனியிலேயே இருப்பது மகிழ்ச்சியாவும், அழகாகவும் இருக்கிறது. குட்டிப்பையனுக்கு என் அன்பும் நன்றியும்.

9:14 PM  
Blogger மழலை said...

@குழந்தைகளின் தொனியிலேயே@
குழந்தைகள் எழுதுச்சுன்னா வேறெ எப்பிடி இருக்கும் தங்கமணி சகா? :8

2:26 AM  
Blogger மழலை said...

8:)

2:27 AM  
Blogger மழலை said...

no, eppidi smiley potradhunnu therilai saha, :)

2:28 AM  
Anonymous Anonymous said...

;-)
:-)
:-(
:-D
:-O
தலையை இடப்பக்கம் சரிச்சுப் பாருங்க.
(*_*)

4:22 AM  
Blogger மழலை said...

ஓ, தேங்க்யூ அனானிமச் சகா :-D

4:35 AM  

Post a Comment

<< Home