மழலைச் சொல்

Saturday, February 25, 2006

என்ன கெழமை?

நா தினமும் காலையில எந்திருச்சு வரும்போது அப்பாட்ட என்ன கேப்பென்...
அப்பா இன்னக்கி ஞாயித்துக் கெழமையா?
இன்னக்கி உங்களுக்கு மீட்டிங் இருக்கா?
இன்னக்கி நீங்க வேலைக்குப் போணுமா?
ஏன்னா அப்பா சனிக் கெழமை, ஞாயித்துக் கெழமைதான் வீட்டுல இருப்பாங்க. அப்பா வீட்டுல இருந்தா எனக்குச் சந்தோஷம். அதுக்காண்டிதான் அப்படிக் கேப்பென்.

4 Comments:

Anonymous Anonymous said...

உங்கப்பா ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வேலைக்குப் போவார்?

நீங்க ரொம்ப விளையாட்டுப் புள்ளையோ?

உங்கப்பாகூட என்ன விளையாடுவீங்க தம்பி?

அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.


உங்கள் தோழி

12:12 PM  
Blogger Thangamani said...

இப்பவே அப்படி கேக்குறீங்களே மழலை! இன்னும் சொச்ச நாள் இருக்கே பிள்ளாய்!!

1:17 PM  
Blogger மழலை said...

தோழி சகா, உங்க கேள்விக்கு வரிசையா பதில்:
1. ப்ர்ர்ர் நாளக்கி
2. (தலையை ஆட்டுறென்)
3.

:-D

5:00 AM  
Blogger மழலை said...

தங்கமணி சகா,
@சொச்ச நாள்@ ன்னா என்ன அப்படின்னு அப்பா என்கிட்ட கேட்டாங்க. நா கோடைக்காலம்னு சொன்னேன்.

இந்த "சொன்னேன்" வார்த்தயப் பாத்தா ரோட்ல போற வண்டி மாதிரி இருக்குன்னு சொன்னேன். அப்பா "மண்ணெண்ணெய்" எழுதிட்டு இது பெரிய வண்டி மாதிரி இருக்கான்னு கேட்டாங்க. ஆமா ரயில் மாதிரி இருக்குன்னு சொன்னென். எனக்கு நிஜ ரயில்ல போக விருப்பம்.

5:06 AM  

Post a Comment

<< Home