குக்கி
நா அம்மாட்ட குக்கி கேட்டென். அம்மா செய்யலாமே எண்டு சொன்னாங்க. கடைக்குப் போய் மா, chocolate chips எல்லாம் வாங்கிட்டு வந்தோம். அம்மாவுக்கு நான் குக்கி பண்ண உதவி செஞ்சென். ஏன்னா நாந்தான் சின்ன சமையல்காரர். அம்மா மாவுக்குள்ள சீனி, முட்டை, சக்கரை, உப்பு, baking soda எல்லாம் போட்டாங்க. நா நல்லா கலக்கு கலக்கு எண்டு கலக்கினேன். அம்மா ட்ர்ர்ர்ன்னு சுத்துதுல்ல அதக் கொண்டு கலக்கினாங்க. நா மாவப் போட்டென். chocolate chips ஐயும் சேர்த்துக் கலக்கினோம். நா கொஞ்சம் chocolate chipsஐ சும்மாவே சாப்பிட்டென். குக்கி மாவ தட்டுல வச்சு அவன்ல வச்சு பேக் பண்ணினோம். அவனை சின்னப் பிள்ளைங்கள் தொடுறது இல்ல. சுட்டுறும். பெரியாக்கள் மட்டுந்தான் தொடணும். கொஞ்ச நேரத்தில அவனைத் தொறந்து பார்த்தா குக்கி வட்ட வட்டமா வந்திருச்சி.சாப்பிட்டு பாத்தன்... ம்ம்ம்ம்ம்ம் யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீ. ஆனா நிறையச் சாப்பிட்டா கீரைப் பூச்சி கடிக்கும்.
7 Comments:
எனக்கு இந்த வலைப்பூவிற்கு வருகை தரும்போது குழந்தைகளுடன் விளையாடியது போன்று மனசு ரிலாக்ஸாகிறது மழலை.
எனக்கு ரெண்டு குக்கி தரிவியா செல்லம்!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
உங்களுக்கு கண்டிப்பா தருவென் சிபி சகா, நாம share பண்ணிக்கனும்தானெ. ஆனா ரொம்பவெல்லாம் கிடையாது, ஏன்னா அப்பறம் எனக்கு முடிஞ்சு போயிரும்.
எனகில்லையா மழலை? உங்க குக்கி படம் பார்த்ததும் பசிக்குது...
அம்மாட்ட சொல்லி உங்க படமும் பேரும் கூட போடுங்களேன்...
வித்தையை காட்டி
மனதை பஞ்சாய்
பறக்க வைக்கும்
வியக்க வைக்கிறாய்
கொள்ளையழகு மழலை
நிச்சயமாய் உங்களுக்கும்தான் குக்கி, திரு சகா!
//ஆனா ரொம்பவெல்லாம் கிடையாது, ஏன்னா அப்பறம் எனக்கு முடிஞ்சு போயிரும்.//
அடடே! நான் ஏதோ கூட்டணிக் கட்சிகளில் தொகுதிப் பங்கீடு மாதிரியெல்லாம் கேட்க மாட்டேன்டா செல்லம். சும்மா டேஸ்ட் பண்ணுறதுக்காக கேட்டேன். நீ செஞ்ச குக்கி இலையா?
அதான் சிபி சகா சும்மா வெள்ளாட்டுக்கு கேட்டேன்!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
//அவனை சின்னப் பிள்ளைங்கள் தொடுறது இல்ல. சுட்டுறும். பெரியாக்கள் மட்டுந்தான் தொடணும்.//
குக்கி செஞ்ச குட்டிக்கு அன்பு முத்தங்கள்
அனானிமச் சகா, உங்களுக்கும் குக்கி உண்டு.
Post a Comment
<< Home