மழலைச் சொல்

Wednesday, February 22, 2006

தூக்கத்திலயும் கேள்வி கேப்பென்

நா தூக்கத்தில பிரண்டு படுத்தென்.
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க," அப்படின்னு அப்பா கூப்பிட்டாங்க.
நா "ஏன்?" அப்படின்னு கேட்டேன்.
நான் தூக்கத்துல உளருறென்னு அப்பா நெனச்சுக் கொண்டு, மறுபடியும்
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க"ன்னு சொன்னாங்க.
நா விளக்கமா "ஏன் ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கனும்?"னு கேட்டென்.
அப்பா சொன்னாங்க, "அப்பதான் படுக்கை நனஞ்சு போவாது."
நா, "சரி," ன்னு சொல்லிட்டுப் போய் ஒன்னுக்கிருந்துட்டு வந்து தூங்கிட்டென்.
நா கேட்ட கேள்வில நட்டநடு ராவையில அப்பாவுக்கு வெடுக்கெண்டு முழிப்பு வந்துடுச்சாம் - விடிஞ்சு பேசிக்கொண்டாங்க.

4 Comments:

Blogger Thangamani said...

கேள்வியின் நாயகனா உங்க பையன்? :)

12:34 PM  
Blogger மழலை said...

@உங்க பையன்?@
என் பையன் யாரு தங்கமணி சகா? நா சின்னப் பையன் தானே :-D

12:38 PM  
Blogger thiru said...

ஆகா! கலக்குறீங்களே கேள்வியாலே! துள்ளித் திரியும் மழலை, அள்ளி தெளிக்கும் வார்த்தைக் கோலம். உள்ளத்தை கிள்ளி சிலிற்க வைக்கிறாய்...

உங்க படமும் பேரும் கேட்டேனே சகா. உங்க அம்மா சகாகிட்டே சொல்லி சீக்கிரம் படம் போட சொல்லுங்க சகா. :D

1:49 PM  
Blogger மழலை said...

அம்மாட்ட கேட்டென் திரு சகா, அவுங்க இப்ப போடாண்டாம் அப்படிங்குறாங்க. சரின்னு அப்பாட்ட கேட்டென். அவரு போடவே வாண்டாம் அப்படிங்குறார். அதுக்காண்டிதான் இந்த குச்சி படத்தோட நிக்கிறென். வேறெ என்ன செய்ய :-(

2:25 PM  

Post a Comment

<< Home