கனவு வரணும்
தூங்கும்போது எனக்குக் கனவு வரும். நேத்து அப்பாகிட்ட சொன்னென், "அப்பா, எனக்குக் கனவெல்லாம் திரும்பத் திரும்ப வரணும்," எண்டு."ஏன் குட்டி?"
"அப்பதா நல்லா சிரிப்பாருக்கும். தினம் கனவு வரணும்."
நா தூங்கும்போது சில நேரம் சிரிப்பென்னு அம்மாவும் அப்பாவும் சொல்லுவாங்க. ஆனா monster (பூதம்), சிலந்தி எல்லாம் வந்தா அழுவென். கனவில சிரிச்சா எந்திரிக்க மாட்டென், ஆனா அழுதா எந்திரிச்சிடுவென். தூங்குறதுக்கு முன்னாடி புத்தகம் படிச்சா நல்ல கனவா வரும்னு அம்மா சொன்னாங்க. அம்மா எனக்குப் புத்தகம் படிப்பாங்க.
posted by மழலை @ 

4 Comments:
தலைவா! படுக்கப் போகும் முன்னால் கலாய்த்தல் திணை ஒரு தடவை பார்த்துடு!
நல்லா சிரிப்பான கனவா வரும்!
சிபி அண்ணா,
படிச்சுப் பாத்தேன், நாளக்கி நானும் பெரிய்ய்ய எழுத்தாளனா வரப் போறென்:)) அதே மாதிரி,
தூங்குறப்ப கலரில கண்ணாடி போட்டா கலர் கலராக் கனவு வருமெண்டு கலய்ப்பிங்களோ?
//நாளக்கி நானும் பெரிய்ய்ய எழுத்தாளனா வரப் போறென்://
வாழ்த்துக்கள் தலைவா!
//அதே மாதிரி,
தூங்குறப்ப கலரில கண்ணாடி போட்டா கலர் கலராக் கனவு வருமெண்டு கலய்ப்பிங்களோ?
//
:)))
கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும்போது ஒரு சில நாட்கள் கண்ணாடி அணிந்தவாறே உறங்கிவிடுவேன். அப்போது நண்பர்கள் "மச்சான், கண்ணாடியை கழற்றி வெச்சிட்டுப் படு" என்றால் நானோ
"இல்லை. கண்ணாடி போட்டுக் கொண்டு படுத்தால்தான் கனவுகள் தெளிவாகத் தெரியும்" என்று சொல்வேன்.
மற்றபடி கலர் கண்ணாடி ஒரு ஸ்பெஷல் ஐடியா! சீக்கிரமெ டிரை பண்ணிப் பாக்குறேன்!
:))
படப்பெட்டி ஒன்று இருக்கிறது. அது உங்கள் அப்பாவிடம் இருக்கும். அதை வாங்கி தலைகு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
-பொன்னாற்மேனியன்
Post a Comment
<< Home