
நானும் அப்பாவும் ராவையில ஒளி விளையாட்டு விளாடுவோம். ஒளி விளையாட்டு எப்படி விளாடுறதுன்னா, ஒரு இருட்டறைக்குள்ள போவொம். ஃப்ளாஷ் லைட்டை (torch light) எடுத்து பை, பலூன், பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், பந்துகள், வண்ணக் காகிதங்கள் எல்லாத்துக்கு உள்ளயும் அடிப்போம். அப்ப அழகான வண்ண வெளிச்சமெல்லாம் தெரியும். அப்பாவும் நானும் கதை, பாட்டு, வசனம், வாயாலே எதாச்சும் இசை எல்லாம் சொல்லிக்கிட்டே லைட் அடிச்சு விளாடுவோம்.

அருண் மாமா எனக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ் லைட் தந்தாங்க. அதுக்குள்ள ஒன்பது பல்பு இருக்கு. டார்ச் லைட்டை அடுத்தாக்களோட கண்ணில, முகத்தில அடிக்கக் கூடாது. ஏன்னா கண்ணு கெட்டுப் போய்டும். நா தினமும் ஒளி விளாட்டுக்கு அப்பாவக் கூப்பிடுவென். ஆனா அப்பா சில நேரம் வருவாங்க, சில நேரம் நாளக்கி விளாடலாம்னு சொல்லுவாங்க.
1 Comments:
ஆஹா அருமையான விளையாட்டா இருக்கிறதே!
Post a Comment
<< Home