மழலைச் சொல்

Thursday, August 24, 2006

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

இன்னைக்கு நிலா வெளிச்சக் கதைநேரத்துக்கு நானும் அம்மாவும் போனோம். எப்பவும் போல இண்டைக்கும் Steve தான் கதை சொன்னாங்க. என்ன கதை தெரியுமா? எப்படி ஒட்டகச்சிவிங்கிக்கு நீளமான கழுத்து வந்துச்சு அப்புறம் எப்படி chip munksக்கு எல்லாம் முதுகில மூணு கோடு வந்துச்சுது எண்டு. கதை சொல்லி முடிஞ்சோடன, ஒட்டகச்சிவிங்கி செய்ய ஒரு தண்ணி குடிக்கிற குவளையும் ஒரு குச்சியும் ஒரு வாலும் ஒரு ஒட்டகச்சிவிங்கியோட படமும் எல்லாருக்கும் குடுத்தாங்க. அம்மாவும் நானும் ஒரு ஒட்டகச்சிவிங்கி செய்தோம்.

முதல்ல படத்துக்கு வண்ணம் பூசிட்டு, குச்சியில ஒட்டினோம்.அப்புறம் குவளையில ஒரு ஓட்டை போட்டு, வண்ணம் பூசி, வாலை அதில சொருகி வச்சோம்.
ஒட்டகச்சிவிங்கியை அந்த ஓட்டைக்குள்ள போட்டோம். இப்ப கழுத்து சின்னதாத்தானே இருக்கு?


இப்ப குவளைக்குள்ள கை விட்டு குச்சியத் தூக்கினா ஒட்டகச்சிவிங்கிக்குக் கழுத்து நீளமா வந்துடும்!

3 Comments:

Blogger Santhosh said...

வாவ் ஒட்டகச்சிவிங்கி நல்லா இருகே. சரி குட்டிப்பையனோட பெயர் என்ன?

12:36 PM  
Blogger Chandravathanaa said...

ஒட்டகச்சிவிங்கி நல்லாயிருக்கு

2:05 PM  
Blogger நாமக்கல் சிபி said...

அட! ஒட்டகச் சிவிங்கி நல்லா இருக்கே!

6:01 PM  

Post a Comment

<< Home