அப்பாவின் சமையல்
சனிக்கிழமை அப்பாதான் வீட்டில சமையற்காரர். சமைச்சாங்க சமைச்சாங்க ரொம்ப நேரமா சமைச்சுக்கொண்டே இருந்தாங்க. அம்மாவும் நானும் படங்களுக்கெல்லாம் நிறம் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்போ அப்பா என்னைக் கூப்பிட்டாங்க. என்கிட்ட ஒரு கிண்ணத்துல அவங்க சமைச்ச கறியைக் குடுத்து சுவைச்சுப் பாக்கச் சொன்னாங்க. அப்போ அம்மாவுக்கு எதுக்கோ கோவம் வந்திருச்சு. நா அம்மாகிட்ட கறியை நீட்டிக்கொண்டே சொன்னென், "அம்மா, இத மணந்து பாருங்க கோவமெல்லாம் போயிரும்." எல்லாரும் சிரிச்சாங்க.
posted by மழலை @ 

2 Comments:
amma kovattha pokkinadu appa samaiyala illa unga mazhalaiya
//நா அம்மாகிட்ட கறியை நீட்டிக்கொண்டே சொன்னென், "அம்மா, இத மணந்து பாருங்க கோவமெல்லாம் போயிரும்." எல்லாரும் சிரிச்சாங்க. //
நானும் சிரிச்சேன். இதைப் படிச்சிட்டு!
குழந்தைகள் பேச்சு எப்போதும் கோவத்தைப் போக்கிடும்.
:)
Post a Comment
<< Home