மழலைச் சொல்

Sunday, March 19, 2006

மியாவ் மியாவ்

அண்டைக்கு நானும் அம்மாவும் நிலாவொளிக் கதை நேரத்துக்குப் போனோம். அது என்னெண்டு கேக்குறிங்களா, அதுதான் moon light story time. அது வாசகசாலையில நடக்கும். நெசமான நிலா வெளிச்சத்தில எல்லாம் சொல்ல மாட்டாங்க. பின்நேரத்தில கதை சொல்லுறதால அத அப்படிச் சொல்லுவாங்க. இப்பதான் பனிக் காலம் ஆச்சே எப்படி வெளியால உக்காந்து கதை கேக்கிறது, குளிருமே, அதால ஒரு அறையிலதான் நடக்கும். எப்பவும் அங்கத்தான் நடக்கும். என்னை மாதிரி நிறைய சின்னச் சின்னப் பிள்ளைங்க எல்லாம் வருவாங்க. Steveதான் எங்களுக்குக் கதை சொல்லுவாங்க.

அவங்க அண்டைக்கு பூனையப்பத்தி ஒரு கதை சொன்னாங்க. ஆனா அந்தக் கதை எனக்குப் பெரிசா விருப்பமா இருக்கல. அப்புறம் பூனை செய்யலாம் எண்டு எல்லாருக்கும் ஒரு பை கொடுத்தாங்க. அதுக்குள்ள
ஒரு brown paper bag, ஒரு மூக்கு, இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கால்கள் எல்லாம் குடுத்தாங்க. அதைக் கொண்டு பூனை செய்ய அம்மா எனக்கு உதவி செஞ்சாங்க.

இதான் நா செஞ்ச பூனைக்குட்டி.
இதைக் கையில மாட்டிக் கொண்டு மியாவ் மியாவ்...ன்னு கத்தினேன்.

7 Comments:

Anonymous Anonymous said...

MEW

12:35 PM  
Anonymous Anonymous said...

wow! I'm going to try making a cat with a brown bag too. Thanks for the super idea!

5:29 PM  
Blogger பரஞ்சோதி said...

மழலை,

உங்க பெயர் என்ன?

இன்று தான் உங்க வலைத்தளம் வந்தேன், அருமையாக இருக்குது.

உங்க புகைப்படங்களையும் காட்டுங்களேன்.

8:38 PM  
Blogger மழலை said...

mew
@with a brown bag@
வேற நிறத்திலயும் செய்யலாம் :D

பரஞ்சோதி சகா, உங்கட கதையெல்லாம் நா சில நேரம் படிப்பன் தெரியுமா?
@உங்க புகைப்படங்களையும் காட்டுங்களேன்.@
நல்ல கதை :D

1:53 AM  
Blogger Sam said...

http://holyox.blogspot.com/2006/03/blog-post_19.html

மழலையின் பெற்றோறுக்கு
உங்கள் மழலையை நான் நாலு என்ற ச்ங்கிலிப் பதிவில் சேர்த்திருக்கிறேன். அவர் வரவை
ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

அன்புடன்
சாம்

4:10 AM  
Blogger மழலை said...

சாம் சகா,உங்கட பதிவை அப்பயே பாத்துட்டம். பாத்துட்டு எங்கிட்ட அப்பாவும் அம்மாவும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாங்க. அப்புறமா அத எழுதுறம், என்ன? உங்களுக்கு நன்றி சகா:D

4:28 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

உங்க அப்பாவுக்கு என் சார்பா வாழ்த்து சொல்றியா? படம் ரொம்ப அழகா இருந்தது. அங்க பதில் எழுத முடியல. வார்த்தை சரிபார்க்கிறதுல ஏதோ பிரச்சினை.

2:08 PM  

Post a Comment

<< Home